மூன்று ஆண்டுகளுக்கான 21வது இந்திய சட்ட ஆணையத்தை அமைப்பதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதியிலிருந்து 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதிவரை செயல்படும்..
21வது சட்ட ஆணையம் கீழ்க்ண்டவாறு அமைக்கப்படும்.
(1) முழு நேர தலைவர்;
(2) நான்கு முழுநேர உறுப்பினர்; (உறுப்பினர்-செயலாளர் உட்பட);
(3) சட்ட விவகாரங்கள் துறைச் செயலாளர் / பதவி வழி உறுப்பினராகவும் செயல்படுவார்;
(ஈ) சட்டத்துறை செயலாளர், / பதவி வழி உறுப்பினராகவும் செயல்படுவார்; மற்றும்
(V) பகுதி நேர உறுப்பினர்கள் ஐந்து பேருக்கு மிகைப்படாமல்.
சட்ட ஆணையம் பரிந்துரைக்கும் விவகாரங்களுக்கோ அல்லது தாமாகவோ நடைமுறையில் உள்ள சட்டங்கள் குறித்து ஆய்வு மற்றும் சீராய்வு மேற்கொள்ளும். அவற்றில் தேவையான சீர்த்திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமெனில் அதற்கான பரிந்துரைகளை அளித்து புதிய சட்ட விதிமுறைகளை ஏற்படுத்தும். நீதி வழங்குவது குறித்து தேவையான ஆய்வுகளை மேற்கொண்டு அதற்கான சீர்த்திருத்தத்தையும் மேற்கொள்ளும். நடைமுறைகள் தாமதமாவது மற்றும் வழக்குகளுக்கான செலவைக் குறைப்பது, விரைவாக தீர்ப்பு வழங்குவது போன்றவற்றிற்கான நடைமுறைகள் குறித்தும் ஆய்வு நடத்தும்.
சட்ட ஆணையத்தின் பிற செயல்பாடுகள் வருமாறு:-
அ) தற்போதுள்ள தேவையற்ற சட்டங்களை கண்டறிந்து அவற்றை நீக்குவதற்கான பரிந்துரைகளை அளிப்பது;
ஆ) அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள குறிக்கோள்களை அடையவும் வழிகாட்டு நெறிமுறைகளை செயல்படுத்தவும் தேவையான புதிய சட்டங்களை உருவாக்க பரிந்துரைத்தல்;
இ) சட்டம் மற்றும் நீதித்துறை நிர்வாகம் பற்றிய செயல்பாடு குறித்து அரசுக்குத் தேவையான பரிந்துரையை அளிப்பது. இதை மத்திய சட்டம் மற்றும் நீதித்துறையின் மூலமாக அரசுக்கு தெரியப்படுத்தலாம்;
ஈ) மத்திய சட்ட அமைச்கத்தின் மூலம் பரிந்துரைக்கப்படும்போது அயல்நாடுகளுக்காக சட்ட ஆய்வுப் பணிகளை மேற்கொள்வது;
உ) சட்ட ஆணையம் மேற்கொள்ளும் ஆய்வுகள், மதிப்பீடுகள், பிரச்சினைகள் ஆகியவை குறித்த அறிக்கைகளை ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு பரிந்துரைகளை அளித்தல்; மற்றும்
ஊ) மத்திய அரசு அவ்வப்போது அளிக்கும் செயல்பாடுகளை மேற்கொள்ளுதல்.
பரிந்துரைகளை இறுதி செய்வதற்கு முன்பு தேவைப்பட்டால் அந்தந்தப் பிரிவின் அமைச்சகங்கள், துறைகள் மற்றும் தொடர்புடையவர்களுடன் ஆணையம் ஆலோசனை மேற்கொள்ளும்.
பின்னணி
இந்திய சட்ட ஆணையம் சட்டப்பூர்வமற்ற அமைப்பாகும். அவ்வப்போது இந்த ஆணையம் அமைக்கப்படும். 1955-ஆம் ஆண்டு முதன் முதலாக இது அமைக்கப்பட்டது. ஒவ்வொரு மூன்று ஆண்டும் இந்த ஆணையம் மீண்டும் திருத்தி அமைக்கப்படுகிறது. 20வது சட்ட ஆணையத்தின் பதவிக் காலம் 2015 ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை இருந்தது.
நாட்டில் உள்ள சட்டங்களை திருத்தி அமைக்கும் வகையில் பல சட்ட ஆணையங்கள் முக்கிய பங்காற்றியுள்ளன. இதுவரை சட்ட ஆணையங்கள் 262 அறிக்கைகளை அரசுக்கு அளித்துள்ளன.