Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மூன்றாவது இந்திய ஆப்பிரிக்க யூனியன் உச்சி மாநாடு 2015 ஆரம்பம் – பிரதமரின் அறிக்கை


மூன்றாவது இந்திய ஆப்பிரிக்க யூனியன் உச்சி மாநாட்டை அக்டோபர் 26 முதல் 29 வரை புது தில்லியில் ஏற்பாடு செய்வதில் இந்தியா பெருமை கொள்கிறது. இம்முறை இந்த மாநாடிற்கான அர்ப்பணிப்பு அதிகரிக்கப்பட்டு, 54 ஆப்பிரிக்க நாடுகளில் இருந்தும் ஆப்பிரிக்க யூனியனியன் இருந்தும் தலைவர்கள் அழைக்கப்பட்டு உள்ளனர்.

ஆப்பிரிக்காவிற்கு வெளியில் ஆப்பிரிக்க நாடுகள் பங்கேற்கும் மிகப் பெரிய உச்சி மாநாடாக இது அமைய உள்ளது. இந்த மாநாடு ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா இடையேயானசிறந்த வருங்காலத்திற்காக கொண்டுள்ள எதிர்பார்ப்பை பிரதிபலிக்கிறது.

இந்தியா ஆப்பிரிக்காவிற்கு இடையேயான உறவு பரஸ்பரம் மரியாதை, நம்பிக்கை, ஒற்றுமை ஆகியவற்றைக் கொண்ட வரலாற்று சிறப்பு மிக்க உறவாகும். தற்போது இந்த உறவு மேலும் வளர்ச்சிக் கண்டு இரு நாடுகளும் பயன் அடையும் வகையில் உள்ளது.

ஆப்பிரிக்காவின் பிரதான முதலீட்டாளராக இந்தியா உள்ளது. இந்தியா ஏறத்தாழ 30 பில்லியன் அமெரிக்க டாலர் அளவில் ஆப்பிரிக்காவில் முதலீடு செய்ததன் மூலம் வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது.

ஒருமித்த கருத்து கொண்டவர்களின் கைகள் இணையும் போது மூன்றாவது இந்திய ஆப்பிரிக்க குழு மாநாடு, இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மேலும் உறுதி செய்யும் பயணத்தின் முக்கிய நிகழ்வாக அமையும்.

இந்திய ஆப்பிரிக்க யூனியன் மாநாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்திய ஆப்பிரிக்க நாட்டின் வர்த்தக அமைச்சர்களும் தொழில் அதிபர்கள் கொண்ட சிறப்பு குழு அக்டோபர் 23ம் தேதி சந்திக்க உள்ளது.

மாநாடு நடைபெறும் இடத்தில் அக்டோபர் 27 மற்றும் 29ம் தேதிகளில் முன்னனி இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் பிரிவின் தொழில் சார்ந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்திய ஆப்பிரிக்க ஒத்துழைப்பு சம்பந்தமான பல்வேறு போட்டிகளை மத்திய கல்வி வாரியம் ஏற்பாடு செய்துள்ளது. இதில் 16,000க்கும் மேற்பட்ட பள்ளிகள் பங்கேற்க உள்ளன.

•••••