Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மூத்த அதிகாரி டாக்டர் மஞ்சுளா சுப்பிரமணியமின் மறைவிற்கு பிரதமர் இரங்கல்


மூத்த அதிகாரி டாக்டர் மஞ்சுளா சுப்பிரமணியமின் மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

 

ட்விட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

 

மூத்த அதிகாரி டாக்டர் மஞ்சுளா சுப்பிரமணியமின் மறைவை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். கொள்கை சம்பந்தமான விஷயங்கள் மற்றும் செயல் சார்ந்த அணுகுமுறையில் அவரது புரிதலுக்காக அனைவராலும் அவர் போற்றப்பட்டார். முதலமைச்சராக நான் பணியாற்றிய போது நிகழ்ந்த அவருடனான கலந்துரையாடல்களை நினைவுகூர்கிறேன். அன்னாரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி.

 

*****

(Release ID: 1887930)

IR/RB/RR