Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மூத்த அணு விஞ்ஞானி டாக்டர் ராஜகோபால சிதம்பரம் மறைவுக்கு பிரதமர் இரங்கல்


 

மூத்த அணு விஞ்ஞானி டாக்டர் ராஜகோபால சிதம்பரம் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். டாக்டர் ராஜகோபால சிதம்பரம், இந்தியாவின் அணுசக்தி திட்டத்தின் முக்கிய சிற்பிகளில் ஒருவராக இருந்தார்.  இந்தியாவின் அறிவியல் மற்றும் பாதுகாப்பு உத்தி திறன்களை வலுப்படுத்துவதில் சிறந்த பங்களிப்பை வழங்கினார் என திரு மோடி கூறியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது;

“டாக்டர் ராஜகோபால் சிதம்பரம்  மறைவு மிகுந்த  வருத்தத்தை அளிக்கிறது. இந்தியாவின் அணுசக்தி திட்டத்தின் முக்கிய சிற்பிகளில் ஒருவராக திகழ்ந்த  அவர், இந்தியாவின் அறிவியல் மற்றும் பாதுகாப்பு உத்தி திறன்களை வலுப்படுத்துவதில் பெரும் பங்களிப்பைச் செய்துள்ளார். இதற்காக அவர்  தேசம் முழுவதிலும்  நன்றியுடன் நினைவுகூரப்படுவார், மேலும் அவரது முயற்சிகள் வரவிருக்கும் தலைமுறையினருக்கு பெரிதும் ஊக்கமளிக்கும்’’.

***

PKV/KV