மும்பை தாஜ்மஹால் அரண்மனையில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் சிறு தானிய உணவுத் திருவிழாவைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் திரு. மனோஜ் கோடக் வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவில், ஜல்கானின் ஜோவர், நாக்பூரின் பஜ்ரா, ஔரங்காபாத்தின் ராகி உள்ளிட்ட உணவுகள், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் சிறு தானிய உணவுத் திருவிழாவின் வடிவத்தில் மும்பையின் தாஜ்மஹால் அரண்மனையை அடைந்துள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார்.
இதற்குப் பதிலளித்த பிரதமர், “மும்பையில் சிறுதானியங்களைப் பிரபலப்படுத்த நடைபெற்ற பாராட்டுக்குரிய முயற்சி இது” எனப் பதிவிட்டுள்ளார்.
***
AD/CR/DL
A laudatory effort to popularise Shree Ann in Mumbai. https://t.co/HigsqfkYz9
— Narendra Modi (@narendramodi) April 16, 2023