Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

முன்னாள் ராணுவ வீரர் திரு ஹவ் பல்தேவ் சிங்கின் (ஓய்வு) மறைவிற்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்


முன்னாள் ராணுவ வீரர் திரு  ஹவ் பல்தேவ் சிங்கின் (ஓய்வு) மறைவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்திருப்பதுடன், இந்தியாவுக்கு அவர் ஆற்றிய மகத்தான சேவை பல ஆண்டுகளுக்கும் நினைவுகூரப்படும் என்றும் கூறியுள்ளார். தைரியம் மற்றும் மன உறுதியின் உண்மையான உருவகமாக விளங்கும் அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, எதிர்கால சந்ததியினருக்கு ஊக்கமளிக்கும் என்று திரு மோடி மேலும் கூறினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

ஹவ் பல்தேவ் சிங்கின் (ஓய்வு) மறைவு வருத்தம் அளிக்கிறது. இந்தியாவுக்கு அவர் ஆற்றிய மகத்தான சேவை பல ஆண்டுகளுக்கு நினைவுகூரப்படும். வீரம் மற்றும் மன உறுதியின் உண்மையான எடுத்துக்காட்டாக அவர் விளங்குகிறார். அவரது தேசத்திற்கான  அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, எதிர்கால சந்ததியினருக்கு ஊக்கமளிக்கும். சில ஆண்டுகளுக்கு முன்பு அவரை நவ்ஷேராவில் சந்தித்ததை நான் நினைவு கூர்கிறேன். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”

***

TS/BR/KR