Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

முன்னாள் மத்திய அமைச்சர் சரத் யாதவ் மறைவுக்கு பிரதமர் இரங்கல்


முன்னாள் மத்திய அமைச்சர் திரு. சரத் யாதவ் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள  பிரதமர் திரு.நரேந்திர மோடி, டாக்டர். லோகியாவின் கொள்கைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர் சரத் யாதவ் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து பிரதமர் தமது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

திரு.சரத் யாதவின் மறைவால் வேதனை அடைந்தேன். தனது நீண்ட கால பொது வாழ்வில், அவர் எம்.பி. மற்றும் மத்திய அமைச்சராக தன்னை உயர்த்திக் கொண்டார். டாக்டர். லோகியாவின் கொள்கைகளால் அவர் பெரிதும் ஈர்க்கப்பட்டார். அவருடனான உரையாடல்கள் எனக்கு எப்போதும் உற்சாகத்தைத் தரும். அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் மற்றும் அனுதாபங்கள். ஓம் சாந்தி”

***

(Release ID: 1890878)

PKV/CR/RR