பாரத ரத்னா விருது பெற்ற நம் முன்னாள் பிரதமர் திரு. அடல் பிகாரி வாஜ்பாயின் 91-வது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“நமது அன்புக்குரிய அடல் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். பல முக்கியமான தருணத்தில் இந்தியாவிற்கு அசாதாரண தலைமைத்துவம் அளித்த அவரது ஆளுமைத்திறனுக்கு நாம் தலைவணங்குவோம். கட்சி தலைவர், நாடுளுமன்ற உறுப்பினர், அமைச்சர், பிரதமர் என எந்த பதவியாக இருந்தாலும், அதில் தனித்தன்மை வாய்ந்து விளங்கியவர் அடல் அவர்கள். இதுவே அவரது சிறப்பம்சம். இன்று மாலை தில்லி வந்தவுடன் நேரடியாக அடல் அவர்களின் இல்லத்திற்கு சென்று நேரில் வாழ்த்து தெரிவிப்பேன்”, என்று பிரதமர் கூறியுள்ளார்.
அதேபோல் பிரதமர் மோடி தனது டுவிட்டரில் திரு. அடல் பிகாரி வாஜ்பாய் 1946-ல் ‘அபுதயா’ என்ற வார இதழில் எழுதிய ஒரு கவிதையை பகிர்ந்துள்ளார்.
Birthday greetings to our beloved Atal ji. We salute this great personality who provided exceptional leadership to India at a crucial time.
— Narendra Modi (@narendramodi) December 25, 2015
Be it as a party leader, Parliamentarian, Minister, Prime Minister, Atal ji distinguished himself in every role. This is his speciality
— Narendra Modi (@narendramodi) December 25, 2015
A Poem by Atal ji in 1946, published in 'Abhudaya' a Weekly established by Pandit Madan Mohan Malaviya. pic.twitter.com/DBVRA5o1kH
— Narendra Modi (@narendramodi) December 25, 2015
After landing in Delhi this evening, will head straight to Atal ji's residence and wish him personally.
— Narendra Modi (@narendramodi) December 25, 2015