முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.
டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வணக்கம் செலுத்துகிறேன் என்று பிரதமர் கூறினார்.
டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாமிற்கு நாம் இன்று வணக்கம் செலுத்துவதோடு அவர் விஞ்ஞானியாகவும் அறிஞராக இந்திய குடியரசுத் தலைவராகவும் புரிந்த அவருடைய சாதனைகளை நாம் கொண்டாடுகிறோம்.
கல்வி கற்பித்தலுக்கு அவர் காட்டிய ஆர்வத்தை நாம் நினைவில் கொண்டுள்ளோம். டாக்டர் கலாம் இளைஞர்களின் சிந்தனையை தூண்டி புதிய பாதையைக் காட்டியவர்.
இன்று டாக்டர் கலாம் நம்மிடையே இல்லை. ஆயினும், அவருடைய சிந்தனைகள், இந்தியாவை பற்றிய தொலைத்தூர கண்ணோட்டம் மற்றும் அவரது கொள்கைகள் நம்மிடையே என்று நிலைத்திருக்கும்.
நரேந்திர மோடி
Salutations to Dr. APJ Abdul Kalam on his birth anniversary. pic.twitter.com/C9kPE7p3We
— Narendra Modi (@narendramodi) October 15, 2015