Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் திரு யஷ்பால் சர்மா அவர்களின் மறைவுக்கு பிரதமர் இரங்கல்


முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், 1983ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற அணியின் உறுப்பினருமான திரு யஷ்பால் சர்மா அவர்களின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், ‘‘திரு யஷ்பால் சர்மா அவர்கள், புகழ்பெற்ற 1983 அணி உட்பட, இந்திய கிரிக்கெட் குழுவில் மிகவும் நேசிக்கப்பட்ட உறுப்பினர்அவர்,  அவரது அணி வீரர்கள், ரசிகர்கள் மற்றும் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர்களுக்கு உத்வேகம் அளித்தவர். அவரது மறைவால் வேதனையடைந்தேன். அவரது குடும்பத்துக்கும் மற்றும் அபிமானிகளுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி’’ என்று கூறியுள்ளார்.

******