Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

முசோரியில் உள்ள லால்பகதூர் சாஸ்திரி நிர்வாகத்திற்கான தேசிய அகடாமி (எல்.பீ.எஸ்.என்.ஏ.ஏ.) மற்றும் நமீபியாவின் நமீபியா பொது நிர்வாகம் மற்றும் மேலாண்மை நிறுவனம் (என்.ஐ.பி.ஏ.எம்.) இடையே திறன் வளர்ப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்


பிரதம மந்திரி திரு.நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அமைச்சரவை, முசோரி, லால்பகதூர் சாஸ்திரி நிர்வாகத்திற்கான தேசிய அகடாமி (எல்.பீ.எஸ்.என்.ஏ.ஏ.) மற்றும் நமீபியாவின் நமீபியா பொது நிர்வாகம் மற்றும் மேலாண்மை நிறுவனம் (என்.ஐ.பி.ஏ.எம்.) இடையே, நமீபியா அரசு அலுவலர்களின் திறன் மேம்பாட்டிற்காகவும், இரு நிறுவனங்களும் பயன்பெறும் வகையிலான பிற பயிற்சி நடவடிக்கைகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கான தனது ஒப்புதலை அளித்தது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், அகாடமி, என்.ஐ.பி.ஏ.எம்.-ற்கு நாட்டின் உயர் பொது சேவை அலுவலர்களுக்கான பயிற்சி நிறுவனத்தை நடத்துவதற்கான தனது அனுபவங்களை பகிர்ந்துக் கொள்ள உதவும். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், பொது நிர்வாகம் மற்றும் திறன் வளர்ப்பு பிரிவுகளில் இரு நாடுகளும் கூட்டாக செயலாற்றவும் உதவும்.

*****