Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மிஷன் ஸ்காட் திட்டத்தின் வெற்றிக்காக இந்திய விண்வெளிப் புத்தொழில் நிறுவனமான திகந்தராவுக்கு பிரதமர் பாராட்டு


மிஷன் ஸ்காட் திட்டத்தின் வெற்றிக்காக இந்திய விண்வெளிப் புத்தொழில் தொடங்கும் நிறுவனமான திகந்தராவை பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். விண்வெளி சூழல் தொடர்பான விழிப்புணர்வை மேம்படுத்துவதில் வளர்ந்து வரும் இந்திய விண்வெளித் துறையின் முக்கிய பங்களிப்பு இது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திகந்தரா வெளியிட்ட பதிவுக்கு பதிலளிக்கும் வகையில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“மிஷன் ஸ்காட் வெற்றிக்காக இந்திய விண்வெளிப் புத்தொழில் நிறுவனமான திகந்தராவிக்குப் (@Digantarahq) பாராட்டுகள். விண்வெளி சூழல் தொடர்பான விழிப்புணர்வை மேம்படுத்துவதில் வளர்ந்து வரும் இந்திய விண்வெளித் துறையின் முக்கியப் பங்களிப்பு இதுவாகும்.”

**** 

PLM/KV