Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மியான்மர் மூத்த ராணுவ தளபதி மின் ஆங் ஹ்லேங்கை பிரதமர் சந்தித்தார்

மியான்மர் மூத்த ராணுவ தளபதி மின் ஆங் ஹ்லேங்கை பிரதமர் சந்தித்தார்


பாங்காக்கில் இன்று நடைபெறும் பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டிற்கு இடையே, மியான்மர் நாட்டின் மூத்த ராணுவ ஜெனரல் மின் ஆங் ஹ்லேங்கை பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்தார். அண்மையில் அந்நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பேரழிவுக்கு இரங்கல் தெரிவித்த திரு நரேந்திர மோடி, இந்த முக்கியமான நேரத்தில் மியான்மரின் சகோதர, சகோதரிகளுக்கு இந்தியா உதவும் என்று உறுதியளித்தார். இந்தியா – மியான்மர் இடையேயான இருதரப்பு உறவுகள், குறிப்பாக போக்குவரத்து இணைப்பு, திறன் மேம்பாடு, உள்கட்டமைப்பு மேம்பாடு உள்பட பல துறைகளில் ஒத்திழைப்பை அதிகரிப்பது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“பாங்காக்கில் நடைபெற்ற பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டின் இடையே, மியான்மரின் மூத்த ராணுவ ஜெனரல் மின் ஆங் ஹ்லேங்கை சந்தித்தேன். அண்மையில் அந்நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் இழப்புக்கும் பொருட்சேதங்களுக்கும் மீண்டும் ஒருமுறை இரங்கல் தெரிவித்தேன். இந்த நெருக்கடியான நேரத்தில் மியான்மரில் உள்ள நமது சகோதர சகோதரிகளுக்கு உதவ இந்தியா முடிந்த அனைத்தையும் செய்து வருகிறது.

இந்தியாவுக்கும் மியான்மருக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள், குறிப்பாக போக்குவரத்து இணைப்பு, திறன் மேம்பாடு, உள்கட்டமைப்பு மேம்பாடு உட்பட பல துறைகளில் ஒத்துழைப்பு குறித்து நாங்கள் விவாதித்தோம்.”

****

(Release ID: 2118597)

TS/PLM/KPG/SG