மியான்மர் நாட்டில் கலடான் பல்நோக்கு சரக்கு போக்குவரத்துத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான திட்ட மதிப்பீடுத் தொகையான ரூ.2904.04 கோடி செலவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் இந்தியாவின் வடகிழக்குப் பகுதிக்கு மாற்றுவழி ஏற்படுத்தப்படும். இதனால் அப்பகுதியின் பொருளாதாரம் மேம்படும். இந்தியாவுக்கும் மியான்மர் நாட்டுக்கும் இடையே பொருளாதார வர்த்தக தொடர்புகள் இத்திட்டத்தின் மூலம் மேம்படும்.
இந்தியாவின் கிழக்குப் பகுதியிலிருந்தும் வடகிழக்குப் பகுதியிலிருந்தும் மியான்மர் நாட்டுக்கு கப்பல்கள் மூலம் சரக்குகள் கொண்டு செல்ல கலடான் பல்நோக்கு சரக்கு போக்குவரத்துத் திட்டம் இந்தியாவிற்கும், மியான்மர் நாட்டுக்கும் இடையே கூட்டாக தெரிந்தெடுக்கப்பட்டது. இத்திட்டம் மியான்மர் நாட்டில் உள்ள சிட்வி துறைமுகத்தையும், இந்தியா-மியான்மர் எல்லைப் பகுதியையும் இணைக்கும். இதன் மூலம் இந்தியாவின் வடகிழக்குப் பகுதிக்கு கடல்வழி ஏற்படுத்தப்பட்டு, அதன் மூலம் அப்பகுதி பொருளாதாரத்தில் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் வடகிழக்குப் பகுதிக்கு முக்கிய இணைப்பை இத்திட்டம் அளிக்கும் என்பதோடு சிலிகுரி பகுதியில் இதன் தாக்கம் குறைக்கப்படும். இதுபோன்ற மாற்றுவழிப் பாதை இல்லாமல் போனால் இத்திட்டத்தின் மூலம் இந்தியா வர்த்தக பொருளாதார மேம்பாடு அடைவதோடு மட்டுமல்லாமல் மியான்மர் நாட்டிலும் வளர்ச்சி ஏற்படும். இதன் மூலம் இந்தியாவுடன் மியான்மர் நாட்டின் பொருளாதார ஒருமைப்பாடு ஏற்படும். இத்திட்டம் அரசியல் மற்றும் வர்த்தகம் ஆகியவற்றை குறிப்பிடத்தகுந்த வகையில் இருப்பதால், மியான்மர் நாட்டிற்கு இத்திட்டத்தை செயல்படுத்த இந்தியா நிதி உதவி அளிக்க முடிவு செய்யப்பட்டது.
2003ஆம் ஆண்டு இத்திட்டம் குறித்து துறைமுகம் மற்றும் உள்நாட்டு நீர்வழி பாதைகளைப் பற்றி அறிக்கைகள் தயார் செய்யப்பட்டது. 2005ஆம் ஆண்டு சாலைவழிப் பற்றியும் அறிக்கை தயார் செய்யப்பட்டது. ரயில்வே அமைச்சகத்தின் பொதுத்துறை நிறுவனமான ரைட்ஸ் நிறுவனம் சிட்வா துறைமுகத்தில் இருந்து கலெட்வா (225 கிலோமீட்டர்) வரையிலான கலடான் நதி வழியே செல்லும் நீர்வழிப் பாதையை பரிந்துரைத்தது. கலெட்வாவிலிருந்து இந்தியா-மியான்மர் எல்லைப் பகுதி (62 கிலோமீட்டர்) வரையிலும் சாலைவழிப் பாதை அமைக்கப்படும். 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ரூ.535.91 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது.