Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மியான்மர் நாட்டின் மக்களாட்சிக்கான தேசிய அமைப்பின் தலைவருடன் கூட்டு செய்தியாளர்கள் சந்திப்பில் ஊடகங்களுக்கு பிரதமர் அளித்த அறிக்கை

மியான்மர் நாட்டின் மக்களாட்சிக்கான தேசிய அமைப்பின் தலைவருடன் கூட்டு செய்தியாளர்கள் சந்திப்பில் ஊடகங்களுக்கு பிரதமர் அளித்த அறிக்கை

மியான்மர் நாட்டின் மக்களாட்சிக்கான தேசிய அமைப்பின் தலைவருடன் கூட்டு செய்தியாளர்கள் சந்திப்பில் ஊடகங்களுக்கு பிரதமர் அளித்த அறிக்கை


மேதகு மியான்மர் மக்களாட்சிக்கான தேசிய அமைப்பின் தலைவர் அவர்களே

தூதுக்குழுவின் உறுப்பினர்களே

செய்தி ஊடகங்களின் உறுப்பினர்ளே

மியான்மரின் மேதகு டா ஆங் சான் சூ கி அவர்கள் இந்தியாவில் முதல் முறையாக அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள போது அவரை வரவேற்பதில் பெருத்த மகிழ்ச்சி அடைகிறேன். மேதகு சூ கி அவர்களே, நீங்கள் இந்திய மக்களுக்கு புதியவரல்ல, தில்லியின் காட்சிகளும், ஒலியும், துடிப்புகளும் உங்களுக்கு பழக்கப்பட்டவையே, உங்களது இரண்டாவது சொந்த வீடான இந்தியாவிற்கு மீண்டும் வரவேற்கிறோம்.

மியான்மரில் ஜனநாயகத்தை இறுதியாக வெற்றிகரமாக நிலைநாட்டுவதில் உங்களது தெளிவான நெடுநோக்கு, நிறைவான தலைமைப்பண்பு மற்றும் போராட்டம் உலகெங்கிலும் உள்ள மக்களை ஈர்த்துள்ளது. இந்தியாவில் உங்களை வரவேற்பது எங்களுக்கு பெருமையளிக்கிறது. கோவாவில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற பீம்ஸ்டெக் உச்சிமாநாடு மற்றும் பிரிக்ஸ், பீம்ஸ்டெக் வெளியிலான உச்சிமாநாடு ஆகியவற்றில் கலந்து கொண்டதற்காக நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

மேதகு சூ கி அவர்களே,

உங்களது தலைமையின் கீழ் மியான்மர் புதிய பயணம் ஒன்றை தொடங்கியுள்ளது. இந்தப் பயணம் நம்பிக்கையின் பயணம், பல்வேறு உறுதிமொழிகளுடன் இணைந்த பயணம்.
தங்களது துடிப்பான செயல்பாடும், மக்களிடையே உங்களது செல்வாக்கும், உங்கள் நாட்டை கீழ்கண்ட துறைகளில் மேம்பாடு அடைய செய்கின்றன.

• விவசாயம், அடிப்படை வசதி மற்றும் தொழில்துறை

• கல்வியை வலுப்படுத்தி இளைஞரிடையே திறன் மேம்படச் செய்தல்

• ஆட்சி முறைக்கான நவீன நிறுவனங்களை உருவாக்குதல்

• தெற்காசியா மற்றும் தென்கிழக்காசியா பகுதிகளுடன் மேலும் ஆழமான இணைப்புகள் ஏற்படுத்துதல்

• உங்கள் குடிமக்களுக்கு பாதுகாப்பு வழங்குதல்

மியான்மர் நாட்டை நவீன, பாதுகாப்பான, பொருளாதார வளம் நிறைந்த, சிறப்பான இணைப்புகள் கொண்ட நாடாக மாற்றுவதற்கான முயற்சிகளுக்கு தலைமையேற்று நடத்தும் உங்களுக்கு இந்தியாவும், இந்திய நட்புறவும் முழு ஆதரவும், ஒத்துழைப்பும் வழங்கும் என்று உறுதிகூற விரும்புகிறேன்.

நண்பர்களே,

மியான்மர் தலைவரும், நானும் இருநாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பின் முழு அம்சங்கள் குறித்து விரிவான பயனுள்ள விவாதத்தை நடத்தி முடித்துள்ளோம். மியான்மருடன் இந்தியாவுக்கு வலுவான மேம்பாட்டு ஒத்துழைப்பு திட்டம் உள்ளது. காலாடான் மற்றும் முத்தரப்பு நெடுஞ்சாலை போன்ற மாபெரும் போக்குவரத்து தொடர்பு திட்டங்களில் இருந்து மனித ஆற்றல் மேம்பாடு, சுகாதாரம், பயிற்சி மற்றும் திறன்மேம்பாடு ஆகிய துறைகள் வரை நாங்கள் எங்களது ஆதாரங்களையும், அனுபவங்களையும் மியான்மருடன் பகிர்ந்து கொண்டுள்ளோம். இந்தியாவின் 175 கோடி அமெரிக்க டாலர் மேம்பாட்டு உதவி மக்களை மையமாகக் கொண்டது. இவை மியான்மர் அரசின் மற்றும் மக்களின் முன்னுரிமைகளை கருத்தில் கொண்டது. இன்று நாங்கள் நடத்திய பேச்சுக்களில் விவசாயம், மின்சாரம், புதுப்பிக்கக் கூடிய எரிசக்தி மற்றும் புதுப்பிக்கக் கூடிய மின்சாரம் போன்றவைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த உடன்பட்டுள்ளோம். மியான்மரில் விதைகள் தரத்தை மேம்படுத்த ஏஸின் என்ற இடத்தில் விதை உற்பத்தி மற்றும் பல்தரப்பு மேம்பாட்டு மையத்தை இந்தியா உருவாக்கும். பயறு வகைகள் வர்த்தகத்தில் பரஸ்பரம் நன்மை பயக்கும் ஏற்பாடு ஒன்றினை உருவாக்கி வருகிறோம். மணிப்பூரில் மோரே என்ற இடத்தில் இருந்து மியான்மர் நாட்டின் டாமு என்ற இடத்திற்கு மின்சார வழங்கலை அதிகரிக்க முன்வந்துள்ளோம். மியான்மர் அரசு தெரிவு செய்யும் இடத்தில் முன்னோடி எல்.ஈ.டி. விளக்குகள் அமைக்கும் திட்டத்தில் நாங்கள் பங்காளர்களாக இணைந்துள்ளோம். இப்போது கையெழுத்தாகியுள்ள மின்சாரத் துறை ஒத்துழைப்பு, புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்த முக்கியமான துறையில் நமது இணைப்புகளை மேம்படுத்துவதற்கான அடிப்படை அமைப்பை உருவாக்க உதவும்.

நண்பர்களே,

மிக நெருங்கிய நட்புறவுடன் கூடிய அண்டை நாடுகள் என்ற வகையல் இந்தியா மற்றும் மியான்மர் பாதுகாப்பு அக்கறையுள்ள விஷயங்கள் ஒரே தன்மைக்கானவை. நமது எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பை உறுதி செய்ய நெருங்கிய ஒருங்கிணைப்பு அவசியம் என்பதில் உடன்பாடு கொண்டுள்ளோம். பரஸ்பரம் அக்கறையுள்ள பாதுகாப்பு விஷயங்களில் இந்த அணுகுமுறை இருநாட்டின் நலன்களுக்கும் ஏற்றதாக இருக்கும். நமது இரு சமுதாயங்களும் நூற்றாண்டுகள் பழமையான பண்பாட்டு இணைப்பைக் கொண்டவை. மியான்மரில் சமீபத்திய நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகோடா புனித தலங்களை புதுப்பிப்பதில் உதவி செய்ய முன் வந்துள்ளோம். புத்தகயாவில் உள்ள மன்னர் மின்டன், மன்னர் பெய்கய்டா ஆகியோரின் கல்வெட்டுக்கள் மற்றும் இரண்டு புராதன கோவில்களை புதுப்பிக்கும் பணியை இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் விரைவில் தொடங்கவுள்ளது.

மேதகு சூ கி அவர்களே,

மியான்மர் நாட்டை அமைதி, தேசிய சமரசம், பொருளாதார சமூக மேம்பாடு ஆகிய துறைகளில் முன்னெடுத்துச் செல்ல நீங்கள் கொண்டிருக்கும் உறுதியையும், உங்கள் தலைமைப் பண்மையும் மீண்டும் ஒருமுறை பாராட்டுகிறேன். நம்பத்தகுந்த நண்பர் மற்றும் பங்களிப்பாளர் என்ற முறையில் இந்தியா உங்களுடன் தோளோடு தோள் நின்று உதவத் தயாராக உள்ளது. உங்களுக்கும் மியான்மர் மக்களுக்கும் வெற்றி உண்டாகட்டும் என்று வாழ்த்துகிறேன்.

அனைவருக்கும் நன்றி. அனைவருக்கும் மிகுந்த நன்றி.