Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மியான்மரிலும், தாய்லாந்திலும் ஏற்பட்ட நிலநடுக்கம் குறித்து பிரதமர் கவலை தெரிவித்துள்ளார்


மியான்மரிலும், தாய்லாந்திலும் இன்று அதிகாலை ஏற்பட்ட பேரழிவு செய்யும் நிலநடுக்கங்கள் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி கவலை தெரிவித்துள்ளார்.

இந்தப் பேரழிவில் சிக்கியவர்களின் பாதுகாப்புக்கம் நல்வாழ்வுக்கும் அவர் மனமார்ந்த பிரார்த்தனை செய்துள்ளார். இந்த சிக்கலான தருணத்தில் மியான்மர் மற்றும் தாய்லாந்து அரசுகளுக்கும் மக்களுக்கும் சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது என்று அவர் உறுதியளித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் எழுதியிருப்பதாவது:

மியான்மரிலும், தாய்லாந்திலும் நிலநடுக்கத்தால் உருவாகியுள்ள நிலைமைக்கு வருத்தம் அடைந்தேன். அனைவரின் பாதுகாப்புக்கும், நல்வாழ்வுக்கும் பிரார்த்தனை செய்கிறேன். சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது. இது தொடர்பாக உதவி செய்யுமாறு எங்கள் அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளோம். மியான்மர் மற்றும் தாய்லாந்து அரசுகளுடன் தொடர்பில் இருக்குமாறு வெளியுறவு அமைச்சகமும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.  

***

Release ID:(2116104)

SMB/SG/KR