Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மின்னணு உபகரணங்கள் மின்குறைகடத்திகள் மேம்படுத்தும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


பிரதம மந்திரி திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை மின்னணு உபகரணங்கள் மற்றும் மின்குறைகடத்திகள் உற்பத்தியை ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ், பொருட்களை உற்பத்தி செய்வதற்கான மூலதன செலவில் 25% ஊக்கத் தொகையை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மின்னணு உபகரணங்கள் மற்றும் மின்குறைகடத்திகள் தொழில் முடங்காமல் தவிர்க்கப் படுவதுடன், நாட்டின் சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்தவும் உதவும்.

நிதிச்சுமை

இத்திட்டத்தின் மொத்த செலவு சுமார் ரூ 3,285 கோடி ஆகும், இதில் சுமார் ரூ 3,252 கோடி ஊக்கத்தொகையாகவும், நிர்வாக செலவுக்கு ரூ 32 கோடியும் ஒதுக்கப்படும்.