பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம் ரூ.22,919 கோடி நிதி உதவியுடன் மின்னணுப் பொருட்கள் வழங்கல் தொடரில் தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதற்கான மின்னணு சாதனங்கள் உற்பத்தி திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
திறன் மேம்பாடு, உலகளாவிய மதிப்புத் தொடருடன் இந்திய நிறுவனங்கள் ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் மூலம் உள்நாட்டு மதிப்புக் கூடுதலை அதிகரித்து, மின்னணு சாதன உற்பத்தி சூழலில் பெருமளவு முதலீடுகளை (உலகளாவிய / உள்நாட்டு) ஈர்க்கும் வகையில், வலுவான உபகரண சூழல் அமைப்பை உருவாக்குவதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
பயன்கள்:
இந்தத் திட்டம் ரூ.59,350 கோடி முதலீட்டை ஈர்ப்பதாக இருக்கும். இதன் மூலம் ரூ.4,56,500 கோடி மதிப்புள்ள பொருட்கள் உற்பத்தி ஆகும். இதன் மூலம் 91,600 பேருக்கு கூடுதலாக நேரடி வேலைவாய்ப்பு உருவாக்கப்படுவதுடன், ஏராளமானவர்களுக்கு மறைமுக வேலைவாய்ப்பும் கிடைக்கும்.
முதலீட்டு காலத்திற்கும் உற்பத்தி காலத்திற்கும் இடைப்பட்ட ஓராண்டு காலம் உட்பட இந்தத் திட்டத்தின் கால அளவு 6 ஆண்டுகள் ஆகும்.
ஊக்கத்தொகையின் ஒவ்வொரு பகுதியும் வழங்கப்படுவது வேலைவாய்ப்பு இழப்புகள் நிறைவேற்றப்படுவதுடன் இணைக்கப்பட்டிருக்கும்.
பின்னணி:
மின்னணு தொழில் என்பது உலக அளவில் அதிகப்படியான வர்த்தகமும் அதிவேக வளர்ச்சியையும் கொண்ட துறைகளில் ஒன்றாகும். உலகளாவிய பொருளாதாரத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த தொழில்துறை நாட்டின் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டை முன்னேற்றி வருகிறது. மத்திய அரசின் பல்வேறு முன்முயற்சிகள் காரணமாக கடந்த 10 ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை இது கண்டுள்ளது. 2014-15 நிதியாண்டில் ரூ.1.90 லட்சம் கோடி மதிப்பிலிருந்த உள்நாட்டு மின்னணு சாதனங்களின் உற்பத்தி 2023-24 நிதியாண்டில் ரூ.9.52 லட்சம் கோடியாக அதிகரித்தது. இதே போல் 2014-15 நிதியாண்டில் ரூ.0.38 லட்சம் கோடியாக இருந்த மின்னணு சாதனங்களின் ஏற்றுமதி 2023-24 நிதியாண்டில் ரூ.2.41 லட்சம் கோடியாக அதிகரித்தது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2116172
***
SMB/SG/KR
A strong impetus to self-reliance and making India a hub for electronics component manufacturing!
— Narendra Modi (@narendramodi) March 28, 2025
The Cabinet approval for Electronics Component Manufacturing Scheme will attract investments and boost job creation. It will encourage innovation as well.https://t.co/Kx2stb4NPD