Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மின்சாரத்துறையின் புதுப்பிக்கப்பட்ட விநியோகப்பிரிவு தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

மின்சாரத்துறையின் புதுப்பிக்கப்பட்ட விநியோகப்பிரிவு தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்


எனது அமைச்சரவைத் தோழர்களே, பல்வேறு மாநிலங்களின் மதிப்புக்குரிய முதலமைச்சர்களே, மின்சாரத்துறையுடன் தொடர்பு கொண்ட முக்கிய பிரமுகர்களே, வணக்கம்!

 அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவின் முன்னேற்றத்தை விரைவுபடுத்துவதில் எரிசக்தி மற்றும் மின் துறைகளுக்கு பெரும் பங்கு உள்ளது. எரிசக்தித் துறையின் பலம், தொழில் தொடங்குவதற்கும், எளிதாக வாழ்வதற்கும் முக்கியமானது. இன்று தொடங்கப்பட்ட திட்டங்கள், மாவட்டத்தின் பசுமை ஆற்றல் மற்றும் எரிசக்தி பாதுகாப்பின் திசையில் குறிப்பிடத்தக்க படிகள். இந்தத் திட்டங்கள் இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்குகள், அர்ப்பணிப்பு மற்றும் அதன் பசுமை இயக்கத்தின் அபிலாஷைகளை வலுப்படுத்தும். லடாக் மற்றும் குஜராத்தில் இரண்டு பெரிய பசுமை ஹைட்ரஜன் திட்டங்களுக்கான பணிகள் இன்று தொடங்குகின்றன. லடாக்கில் அமைக்கப்படும் ஆலை, நாட்டில் உள்ள வாகனங்களுக்கு பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்யும். பசுமை ஹைட்ரஜன் அடிப்படையிலான போக்குவரத்தை வணிக ரீதியாகப் பயன்படுத்துவதை சாத்தியமாக்கும் நாட்டின் முதல் திட்டமாக இது இருக்கும். எரிபொருள் மின்கலங்களைக் கொண்ட மின்சார வாகனங்கள் இயங்கத் தொடங்கும் நாட்டின் முதல் இடமாக லடாக் விரைவில் இருக்கும். இது லடாக்கை கார்பன் அற்ற பிராந்தியமாக மாற்ற உதவும்.
பெட்ரோல் மற்றும் விமான எரிபொருளில் எத்தனால் கலப்புக்குப்  பிறகு, தற்போது  இயற்கை எரிவாயு குழாய்களில் பசுமை  ஹைட்ரஜனை கலப்பதை நோக்கி நாடு நகர்ந்து வருகிறது. இது இயற்கை எரிவாயு மீதான இறக்குமதி சார்பைக் குறைக்கும்.
 எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, நாட்டின் மின்துறையின் ஒவ்வொரு பகுதியையும் மாற்றியமைக்க அரசு முன்முயற்சி எடுத்தது. மின் அமைப்பை மேம்படுத்த உற்பத்தி, பரிமாற்றம், விநியோகம் மற்றும் இணைப்பு ஆகிய நான்கு வெவ்வேறு பிரிவுகள்  ஒன்றாகச் செயல்பட்டன. கடந்த 8 ஆண்டுகளில், நாட்டில் 1,70,000 மெகாவாட் மின் உற்பத்தி நிறுவு திறன் சேர்க்கப்பட்டுள்ளது. ஒரே நாடு ஒரே மின் உற்பத்தித் திட்டம் இன்று நாட்டின் பலமாக மாறியுள்ளது. முழு நாட்டையும் இணைக்கும் வகையில் சுமார் 1,70,000 சுற்று கிலோமீட்டர் டிரான்ஸ்மிஷன் லைன்கள் போடப்பட்டுள்ளன. மேலும், சௌபாக்யா திட்டத்தின் கீழ் 3 கோடி இணைப்புகளை வழங்குவதன் மூலம், செறிவூட்டல் இலக்கை நெருங்கி உள்ளோம்.
சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைவதற்குள் 175 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை உருவாக்க முடிவு செய்துள்ளோம். இன்று நாம் இந்த இலக்கை நெருங்கிவிட்டோம். இதுவரை, புதைபடிவமற்ற மூலங்களிலிருந்து சுமார் 170 ஜிகாவாட் திறன் நிறுவப்பட்டுள்ளது. இன்று, நிறுவப்பட்ட சூரிய சக்தியின் அடிப்படையில் உலகின் முதல் 4-5 நாடுகளில் இந்தியா உள்ளது. உலகின் மிகப் பெரிய சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் பல இன்று இந்தியாவில் உள்ளன. நாட்டில் இன்று மேலும் இரண்டு பெரிய சூரியசக்தி ஆலைகள் கிடைத்துள்ளன. தெலுங்கானா மற்றும் கேரளாவில் கட்டப்பட்ட இந்த ஆலைகள் நாட்டிலேயே முதல் மற்றும் இரண்டாவது பெரிய மிதக்கும் சூரியசக்தி ஆலைகள் ஆகும். வீடுகளில் சூரியசக்தி தகடுகள் அமைக்க ஊக்குவிக்கப்படுகிறது..
மின்சார உற்பத்தியை அதிகரிப்பதுடன், மின்சாரத்தை சேமிப்பதற்கும் அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. மின்சாரத்தை சேமிப்பது என்பது எதிர்காலத்தை வளமாக்குவதாகும். பிரதமர் குசும் திட்டம் இதற்கு சிறந்த உதாரணம். விவசாயிகளுக்கு சூரியசக்தி பம்ப் வசதி செய்து தருகிறோம், வயல்களின் ஓரத்தில் சூரியசக்தி தகடுகள்  அமைக்க உதவுகிறோம். 
நாட்டில் மின் நுகர்வு மற்றும் கட்டணங்களைக் குறைப்பதிலும் உஜாலா திட்டம் பெரும் பங்காற்றியுள்ளது. ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களின் மின்கட்டணத்தில் ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் கோடி சேமிக்கப்படுகிறது.
நமது விநியோகத் துறையில் இழப்பு இரட்டை இலக்கத்தில் உள்ளது. அதேசமயம் உலகின் வளர்ந்த நாடுகளில் இது ஒற்றை இலக்கத்தில் உள்ளது. அதாவது, நமக்கு மின்சாரம் விரயமாகிறது, எனவே மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்ய தேவைக்கு அதிகமாக மின்சாரம் உற்பத்தி செய்ய வேண்டும். பல மாநிலங்களில் விநியோகம் மற்றும் பரிமாற்ற இழப்புகளை குறைப்பதில் முதலீடு பற்றாக்குறை உள்ளது. பல்வேறு மாநிலங்களுக்கு 1 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் நிலுவைத் தொகை உள்ளது என்பதை அறிந்து மக்கள் ஆச்சரியப்படுவார்கள். இந்தப் பணத்தை மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும். பல அரசுத் துறைகள், மற்றும் உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து மின் பகிர்மான நிறுவனங்கள் ரூ.60 ஆயிரம் கோடிக்கு மேல் பாக்கி வைத்துள்ளன. பல்வேறு மாநிலங்களில் மின்சாரத்திற்கான மானியத்திற்காக கட்டப்பட்ட பணத்தைக் கூட இந்த நிறுவனங்களால் உரிய நேரத்தில் முழுமையாகப் பெற முடியவில்லை. இந்த நிலுவைத் தொகையும் ரூ.75,000 கோடிக்கு மேல் உள்ளது. மின் உற்பத்தியில் இருந்து வீடு வீடாக விநியோகம் செய்வது வரையிலான நடவடிக்கைகளுக்கு பொறுப்பானவர்களின் சுமார் இரண்டரை லட்சம் கோடி ரூபாய் சிக்கியுள்ளது.
நிலுவையில் உள்ள மாநிலங்கள், அவற்றை விரைவில் தீர்க்கவேண்டும். மேலும், நாட்டு மக்கள் நேர்மையாக மின்சாரக் கட்டணத்தைச் செலுத்தும்போதும், சில மாநிலங்கள் மீண்டும் மீண்டும் நிலுவைத் தொகையை ஏன் செலுத்துகின்றன என்பதற்கான காரணங்களை நேர்மையாகச் சிந்தித்துப் பாருங்கள்? இது அரசியல் தொடர்பான விஷயம் அல்ல, நாட்டு  நிதி மற்றும் தேசத்தை கட்டியெழுப்புவது தொடர்பானது.
மின்சாரத் துறையின் ஆரோக்கியம் அனைவரின் பொறுப்பு என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணரவேண்டும்.

*********