Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மினிக்காய்,துண்டி கடற்கரை, கட்மாட் கடற்கரை ஆகியவை தூய்மையான கடற்கரைகள் பட்டியலில்சேர்க்கப்பட்டிருப்பதற்காக லட்சத்தீவின் மக்களுக்கு பிரதமர் வாழ்த்துத்தெரிவித்துள்ளார்


உலகின் தூய்மையான கடற்கரைகளுக்கு வழங்கப்படும் சுற்றுச்சூழல் முத்திரையை மினிக்காய், துண்டி கடற்கரை, கட்மாட் கடற்கரை ஆகியவை பெற்று தூய்மையான கடற்கரைகள் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பதற்காக லட்சத்தீவின் மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இந்தியாவின் மிகச்சிறந்த கடற்கரை பற்றி எடுத்துரைத்துள்ள பிரதமர், கடற்கரை தூய்மையை மேலும் அதிகரிக்க இந்தியர்களிடம் உள்ள ஆர்வத்தைப் பாராட்டினார்.

மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு பூபேந்திர யாதவின் ட்விட்டர் பதிவைப் பகிர்ந்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது;

இது மகத்தானது! குறிப்பாக, இந்த சாதனைக்காக லட்சத்தீவு மக்களுக்கு வாழ்த்துக்கள். இந்தியாவின் கடற்கரை சிறப்பானது. கடற்கரை தூய்மையை அதிகரிக்க மக்களிடையே உள்ள ஆர்வம் மிகப்பெரியதாகும்.’’

**************