Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மிசோரம் மாநில தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்


மிசோரம் மாநில தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மிசோரமின் தொடர்ச்சியான முன்னேற்றம், அமைதி மற்றும் செழிப்புக்காக அவர் பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது;

மிசோரம் மக்களுக்கு மாநில அமைப்பு தின வாழ்த்துகள். மிசோரமின் தனித்துவமான கலாச்சாரம், அதன் வளமான அழகு மற்றும் அதன் மக்களின் அன்பான உணர்வு ஆகியவற்றால் இந்தியா மிகவும் பெருமை கொள்கிறது. பாரம்பரியம் மற்றும் நல்லிணக்கத்தின் கலவையை உள்ளடக்கிய மிசோரத்தின் கலாச்சாரம் மிகவும் ஊக்கமளிக்கிறது. மிசோரமின் தொடர்ச்சியான முன்னேற்றம், அமைதி மற்றும் செழிப்புக்காக பிரார்த்திக்கிறேன்”.

***

(Release ID: 2007270)

ANU/SM/BS/AG/KRS