Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மிசோரம் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தின் மாநில தினம் – பிரதமர் வாழ்த்து


மிசோரம் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இன்று மாநில தினத்தை கொண்டாடுவதை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

மிசோரம் மாநிலம் தனது மாநில தினத்தை கொண்டாடுவதை முன்னிட்டு மிசோரம் மக்களுக்கு எனது வாழ்த்துகள். வரும் ஆண்டுகளில் மிசோரம் மேலும் வளர்ச்சி அடைய நான் பிரார்த்திக்கிறேன்.

அருணாச்சலப் பிரதேச மக்களுக்கும் எனது மாநில தின நல்வாழ்த்துகள். வரும் காலங்களில் இம்மாநிலம் வளர்ச்சியின் புதிய உயரங்களை எட்டட்டும் என்று பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

****