Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மாஸ்கோவில் “இந்தியாவின் நண்பர்கள்” நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொண்டார்.

மாஸ்கோவில் “இந்தியாவின் நண்பர்கள்” நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொண்டார்.

மாஸ்கோவில் “இந்தியாவின் நண்பர்கள்” நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொண்டார்.

மாஸ்கோவில் “இந்தியாவின் நண்பர்கள்” நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொண்டார்.

மாஸ்கோவில் “இந்தியாவின் நண்பர்கள்” நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொண்டார்.


பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள், ரஷ்ய கலைஞர்கள் நடத்திய இந்தியாவின் நாட்டுப்புற மற்றும் பாரம்பரிய கலை வடிவ நடன நிகழ்ச்சிகள் இடம் பெற்ற இந்தியாவின் நண்பர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ரஷ்யாவில் பிரபலமடைந்துள்ள இந்திய கலை வடிவங்களையும், இரு நாடுகளிடையே உள்ள கலாச்சார புரிதல்களையும் இந்நிகழ்ச்சி எடுத்துக் காட்டியது. சுலோகம் படிப்பதில் தொடங்கிய இந்நிகழ்ச்சி, புதிய வகையில் இசைக்கப்பட்ட வந்தேமாதரம், மற்றும் குச்சிப்புடி, கதக், டாண்டியா நடனங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியிருந்தது. அனைத்து கலைஞர்களும் ஒன்றிணைந்து, திரு அடல் பிகாரி வாஜ்பாய் எழுதிய பாடலான “கீத் நயா காத்தா ஹுன்” என்ற பாடலை இசைத்தனர்.

அந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கலைஞர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். குறிப்பாக சாட்டி கஸனோவா என்ற ரஷ்யாவில் இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்த அந்தப் பெண், வேத மந்திரங்களை உச்சரித்ததை பிரதமர் பாராட்டினார்.

இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தை ரஷ்ய மக்கள் விரும்புவதற்கு பிரதமர் பெருமை தெரிவித்தார். ரஷ்ய மக்களுக்கு ஈத் உல் மிலாத் மற்றும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்த பிரதமர், அடுத்த நாள், முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் பிறந்தநாள் என்பதையும் குறிப்பிட்டார்.

இந்திய கலாச்சாரத்தை பாராட்ட ரஷ்யாவில் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதமர் தெரிவித்தார். சர்வதேச யோகா தினம், ரஷ்யாவில் 200 இடங்களில் கொண்டாடப்பட்டதாக பிரதமர் தெரிவித்தார். ரஷ்யாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே நீண்ட கால வர்த்தக உறவுகளும், கல்வி உறவுகளும் இருப்பதாக தெரிவித்த பிரதமர், இந்தியாவின் நெருக்கடியான காலங்களில், ரஷ்யா உடனிருந்ததாக தெரிவித்தார். இந்தியா போரை சந்தித்த காலங்களில் ரஷ்யா துணை நின்ற காரணத்தால், இந்திய வீரர்கள் வெற்றியடைந்தனர் என்று பிரதமர் தெரிவித்தார்.

இது ஒரு வலிமையான உறவு. நட்பின் அடிப்படையில் ஏற்பட்ட வலிமை இது. சர்வதேச அரங்குகளில் கூட, ரஷ்யா இந்தியாவை ஆதரித்தே வந்திருக்கிறது என்றார் பிரதமர்.

ரஷ்யாவில் படிக்கும் இந்திய மாணவர்களுக்கு ஊக்கம் தெரிவித்த பிரதமர், ரஷ்யர்களை இந்தியாவுக்கு சுற்றுலாவுக்காக வருகை தருமாறு அழைப்பு விடுத்தார்.

உலக அரங்கில் இந்தியா அதன் பொருளாதார செயல்பாடுகளுக்காக பாராட்டப்படுகிறது என்றார் பிரதமர். உலகம் இந்தியாவை நம்பிக்கையோடு பார்க்கிறது என்று குறிப்பிட்ட பிரதமர், முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்வதற்கு நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் என்றார். இந்த முதலீடுகள், இந்தியாவில் உலகத்தரம் வாய்ந்த உட்கட்டமைப்பை ஏற்படுத்த வகை செய்வதோடு, மாணவர்களுக்கு வேலை வாய்ப்பையும் பெற்றுத் தருகிறது என்றார். உலகம் இந்தியாவை தற்போது ஒரு சந்தையாக மட்டும் பார்ப்பதில்லை, மாறாக ஒரு உற்பத்தி மையமாக பார்க்கிறார்கள் என்றார்.

தனது ரஷ்ய விஜயம், மிகுந்த பயனுள்ளதாகவும் வெற்றிகரமாகவும் அமைந்தது என்று குறிப்பிட்ட பிரதமர், அதிபர் புடினோடு நடத்திய பேச்சுவார்த்தைகள் மிகவும் வெற்றிகரமாக அமைந்தது என்றார்.

***