இந்திய – கொரிய நாடுகள் பரஸ்பரம் அங்கீகாரம் மேற்கொள்வதற்காக கையொப்பம் இடுவதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. கப்பல் மாலுமிகளுக்கான பயிற்சி, சான்றொப்பம், கண்காணித்தல் ஆகியவற்றைத் தரப்படுத்துவதற்கான பன்னாட்டு மாநாட்டில் (STCW), 1978ல் திருத்தப்பட்ட 1/10 ஆவது விதிமுறையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இந்த உடன்பாட்டில் கையெழுத்திடுவதன் மூலம், ஒரு நாடு மாலுமிகளுக்கு அளிக்கும் கடல்சார் கல்வி, பயிற்சி, திறனுக்கான சான்றிதழ்கள், ஒப்புதல்கள், பயிற்சி ஆவணச் சான்றுகள் மற்றும் மருத்துவச் சான்றிதழ்கள் ஆகியவற்றுக்கு அங்கீகாரம் கிடைக்கும்.
மாலுமிகளுக்கான பயிற்சி, சான்றொப்பம், கண்காணித்தல் ஆகியவற்றைத் தரப்படுத்துவதற்கான பன்னாட்டு மாநாட்டில் (STCW) கொண்டுவரப்பட்ட 1/10-வது விதியின் கீழும், மாலுமிகளுக்கானபயிற்சி, சான்றிதழ், மேலாண்மை ஆகியவற்றில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பின் கீழும் இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.