இந்த ஆண்டு நவம்பர் 22ஆம் தேதியன்று, ஆஸ்திரேலியா சிட்னியில் கையெழுத்தான, மாற்றுத்திறனாளிகள் துறையில் ஒத்துழைப்பதற்கான இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு, பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கூட்டு முயற்சிகள் வாயிலாக, மாற்றுத்திறனாளிகள் துறையில் இருநாட்டு ஒத்துழைப்பை இந்த ஒப்பந்தம் ஊக்குவிக்கும். மேலும், இரண்டு நாடுகளிலும் உள்ள அறிவு சார்ந்த மற்றும் மூளைசார்ந்த ஊனத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மறுவாழ்வுக்கான வசதிகளையும் மேம்படுத்தவும் இது வழிவகுக்கும்.
விகீ
****