Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மாற்றுத் திறனாளிகளுக்கான 2018 ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பிரதமர் பாராட்டு


மாற்றுத் திறனாளிகளுக்கான 2018 ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி சந்தித்து பாராட்டு தெரிவித்தார்.

     இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், வீர்ர்கள் பதக்கம் வென்றது தமக்கு மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்தார்.   அவர்களது திறமையைப் பாராட்டிய பிரதமர், அவர்களின் மனவலிமையே இந்த வெற்றிக்கான முக்கிய காரணம் என்றும், சர்வதேச அளவில் இந்தியாவின் தோற்றத்தை மேம்படுத்தியதற்காகவும் விளையாட்டு வீரர்களைப் பாராட்டினார்.

     பதக்கம் வென்ற வீர்ர்களின் பயிற்சியாளர்களையும் பிரதமர் பாராட்டினார்.

     வெற்றி பெறுவோம்; புதிய உயரங்களை மேலும் எட்டுவோம் என்ற நம்பிக்கையுடன் வீரர்கள் விளையாடிட வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.

*****