Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மாற்றத்திற்கான போக்குவரத்து மற்றும் பேட்டரி சேமிப்பு தேசிய இயக்கத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது


பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவையில் கீழ்வரும் முடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

i. தூய்மையான, ஒன்றோடு ஒன்று தொடர்புடைய, பகிர்ந்து கொள்ளும் வகையிலான, நீடிக்கவல்ல, முழுமையான போக்குவரத்து முன்முயற்சிக்கு மாற்றத்திற்கான போக்குவரத்து மற்றும் பேட்டரி சேமிப்பு தேசிய இயக்கத்தைத் தொடங்குதல்

ii. 2024 வரை ஐந்தாண்டுகளுக்கு செயல்படுத்தக் கூடிய பல கட்ட உற்பத்தித் திட்டம் இந்தியாவில் பெருமளவிலான, ஏற்றுமதிக்கு உகந்த ஒருங்கிணைந்த பேட்டரிகள் மற்றும் செல்கள் தயாரிப்புக்கான மாபெரும் திட்டங்களுக்கு உதவி செய்தல்

iii. 2024 வரை ஐந்தாண்டுகளுக்கு பொருந்தும் வகையில் முழுவதும் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கான பல கட்ட உற்பத்தித் திட்டம்

பல கட்ட உற்பத்தி திட்டங்கள் இரண்டையும் மாற்றத்திற்கான போக்குவரத்து மற்றும் பேட்டரி சேமிப்பு தேசிய இயக்கம் இறுதி செய்யும்.

பின்னணி:

2018 செப்டம்பரில் நடைபெற்ற உலகப் போக்குவரத்து உச்சி மாநாட்டின் போது இந்தியாவின் எதிர்கால போக்குவரத்து பொதுவான, ஒன்றோடொன்று இணைக்கக் கூடிய, வசதியான, நெரிசல் இல்லாத, சார்ஜ் செய்யப்பட்ட, தூய்மையான, அதிநவீனமான 7 அம்சங்களைக் கொண்டதாக இருக்கும் என்று பிரதமர் தெரிவித்திருந்தார்.

*****