Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மார்சேயில் இந்திய துணைத் தூதரகத்தை பிரான்ஸ் அதிபரும் இந்திய பிரதமரும் இணைந்து திறந்து வைத்தனர்

மார்சேயில் இந்திய துணைத் தூதரகத்தை பிரான்ஸ் அதிபரும்  இந்திய பிரதமரும் இணைந்து திறந்து வைத்தனர்


பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் திரு இம்மானுவேல் மெக்ரோன் ஆகியோர் இணைந்து மார்சேயில் புதிய இந்திய துணைத் தூதரகத்தை இன்று திறந்து வைத்தனர்

இந்தத்  துணை தூதரகம்  திறந்து வைக்கப்பட்டது இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவின் முக்கிய அடையாளமாக அமைந்துள்ளது.  வரலாற்றுச் சிறப்புவாய்ந்த இந்த நிகழ்ச்சியில் இருநாட்டுத் தலைவர்களையும் அங்கிருந்த வம்சாவளியினர் அன்புடன் வரவேற்றனர்.

2023-ம் ஆண்டு ஜூலை மாதம்  பிரதமர் திரு நரேந்திர மோடி பிரான்ஸ் நாட்டில் மேற்கொண்ட பயணத்தின் போது மார்சேயில் துணைத் தூதரகம் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. பிரான்சின் தென்பகுதியில் உள்ள அந்நாட்டின் ஆல்பஸ் மாகாணம், கோர்சிகா மாகாணம், ஆக்சிடெனி மாகாணம் மற்றும் அவர்ஜின் ஆகிய நான்கு நிர்வாகப் பகுதிகளுக்கு இந்தத் துணைத் தூதரகத்தின் அதிகார வரம்பு இருக்கும்.

பிரான்சின் இந்தப் பகுதி வர்த்தகம், தொழில், எரிசக்தி மற்றும் ஆடம்பர சுற்றுலாவுக்கு உகந்த வகையில்  அமைந்துள்ளது. குறிப்பிடத்தக்க பொருளாதாரம், கலாச்சாரம், மக்கள் தொடர்பு ஆகியவற்றை உள்ளடக்கியதாக இப்பகுதி அமைந்துள்ளது. பிரான்சின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நகரத்தில் புதிய துணைத் தூதரகத்தின் மூலம் பன்முகத்தன்மை கொண்ட இந்தியா-பிரான்ஸ் இடையேயான உத்திசார் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும்.

 

***

(Release ID: 2102333)

TS/SV/KPG/DL