Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மாநில முதல்வர்கள் கூட்டத்தில் பிரதமரின் நிறைவு உரை


மாநில முதல்வர்கள் கூட்டத்தில் பங்கேற்று தங்களின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் வழங்கிய அனைத்து முதலமைச்சர்களுக்கும் மற்றும் துணை நிலை ஆளுநர்களுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார்.

புன்ஷி ஆணையத்தின் ஆலோசனை குறித்துப் பேசிய பிரதமர், இது சிறந்த துவக்கத்தைக் குறிக்கிறது என்று கூறினார். இது குறித்த விவாதங்கள் தொடரும். இந்த ஆலோசனைகளுக்கு பொதுவான ஒப்புதல் கிடைத்தப்பின் அமலாக்கம் தொடரும்.

சிறந்த அரசு முறையையும் வெளிப்படைத் தன்மையையும் ஊக்குவிக்கும் கருவியாக ஆதாரை ஏறக்குறைய முழுமையாக ஏற்றுக் கொண்டது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் குறிப்பிட்டார். ஆதார் திட்டத்தினால் நிதிக்கருவூலத்திற்கு குறிப்பிடத்தக்க சேமிப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் மூத்த அலுவலர்கள் இதன் மூலம் மாநிலங்கள் எவ்வளவு சேமித்துள்ளன என்ற தரவை சேகரிக்க வேண்டும். அனைத்து அஞ்சல் அலுவலகங்களும் பணம் செலுத்தும் வங்கியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இது நேரடி மானிய பரிமாற்றத்தை அமலாக்கம் செய்வதற்கு சிறந்த உதவியாக இருக்கும் என்று பிரதமர் கூறினார்.

கல்வியைப் பொறுத்தவரை, கல்வி நிறுவனங்களை விரிவு படுத்துதல் மட்டும் போதாது. கல்வியின் தரத்தில் கவனம் செலுத்தப்பட வேண்டும். கல்வி தரத்தில் உள்ள குறைகளை தொழில்நுட்பம் மூலம் சரி செய்யலாம் என்று பிரதமர் கூறினார்.

சட்டம் மற்றும் ஒழுங்கு குறித்துப் பேசுகையில், இந்தியாவில் உள்ள மத்திய மற்றும் மாநில அரசுகள் உலகில் நடைபெறும் எந்த நிகழ்வையும் புறக்கணிக்க முடியாது. அரசியல் பிரச்சினைகளை தவிர்த்து அனைவரும் தேசிய பாதுகாப்பை முக்கியமாக கருத வேண்டும் என்று பிரதமர் கூறினார். மாநில காவல் துறையின் இயக்குநர்களுடன் நடைபெற்ற மூன்று மாநாட்டை நினைவு கூர்ந்த பிரதமர், மாநாட்டில் விவாதிக்கப்பட்ட அனைத்து விஷயங்களையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று முதலமைச்சர்களைக் கேட்டுக் கொண்டார். அனைத்து இடங்களிலும் காவல் படையினர் இருப்பதையும் சிறந்த கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவதின் மூலம் குற்றங்களை ஒழிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். தனிப்பட்ட முறையில் பொருத்தப்படும் கண்காணிப்பு கேமராக்கள் இவ் விஷயத்தில் மிகவும் பயனளிக்கிறது என்று பிரதமர் கேட்டுக் கொண்டார். சட்டத்துக்கு விரோதமான நடவடிக்கைகளை ஒழிக்க மாநிலங்கள் இடையே ஒத்துழைப்பின் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

முதலமைச்சர்கள் மற்றும் துணை நிலை ஆளுநர்களின் ஆலோசனைகள் கவனமாக பரிசீலிக்கப்படும் என்று பிரதமர் உறுதியளித்தார்.