பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவைக் குழு, மாநில முதலமைச்சர்களின் துணைக் குழுவின் மத்திய திட்டங்களை ஒழுங்குபடுத்துதல் குறித்த பரிந்துரைக்கு ஒப்புதல் அளித்தது. முதலமைச்சர்களின் துணைக் குழு 66 மத்திய திட்டங்களை பரிசீலனை செய்து, மத்திய திட்டங்கள் 30க்கும் மிகாமல் இருக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது. பல்வேறு முக்கிய அம்சங்களில் இத்துணைக் குழுவில் பங்கேற்ற மாநிலங்கள் அல்லாமல் இதர மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய அரசுத் துறைகளோடு கலந்தாலோசனை செய்து ஒரு ஒருமித்த கருதது எட்டப்பட்டது.
மத்திய திட்டங்களை ஒழுங்குபடுத்துதல் மத்திய அரசின் நிதிகளை சரியான முறையில் பயன்படுத்த உதவுவதோடு, அதனால் விளையும் பயன்களையும் அதிகரிக்கும். இதன் மூலம் பயனாளிகளுக்கு பரவலான முறையில் பலன் சென்றடைய இது உதவும்.
8 பிப்ரவரி 2015 அன்று நடந்த நித் ஆயோக் நிர்வாகக் குழுவின் முதல் கூட்டத்தில் முதலமைச்சர்களின் துணைக் குழு உருவாக்கப்பட்டது. இந்த துணைக் குழுவின் முக்கிய நோக்கம், மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய அரசுக்கிடையே உள்ள வேறுபாடுகளை களைந்து ஒன்றுபட்ட இந்தியாவாக செயல்படுவதே. இந்தியா 75வது சுதந்திர தினத்தை கொண்டாடுகையில், குடியரசுத் தத்துவத்தின் உண்மையான பிரதிபலிப்பை உணர்ந்து விஷன் இந்தியா 2022ன் இலக்குகளை அடைவதே. விஷன் இந்தியா 2022ன் முக்கிய இலக்குகள் (அ) சுய கவுரவத்தோடும் சுயமரியாதையோடும் அனைத்து அடிப்படை வசதிகளோடு வாழ்வை உத்தரவாதம் செய்வது. (ஆ) அனைத்து குடிமக்களின் தகுதிக்கேற்ப வாய்ப்புகளை உருவாக்குவது.
4) துணைக்குழுவின் முக்கியமான பரிந்துரைகள் பின் வருமாறு
அ) திட்டங்களின் எண்ணிக்கை : மொத்த திட்டங்களின் எண்ணிக்கை 30ஐ தாண்டக் கூடாது
ஆ) திட்டங்களை வகைப்படுத்துதல் : தற்போதுள்ள மத்திய அரசின் திட்டங்கள் அடிப்படை திட்டங்கள், விருப்பத் திட்டங்கள் என்று வகைப்படுத்த வேண்டும்.
இ) அடிப்படை திட்டங்கள் : தேசிய வளர்ச்சியை மையமாகக் கொண்ட திட்டங்களில் மத்திய அரசும் மாநில அரசுகளும், ஒன்றுபட்ட இந்தியா என்ற எண்ணத்தில் செயல்படுத்த வேண்டும்.
ஈ) அடிப்படை திட்டங்களில் முக்கியமானவை : சமூக பாதுகாப்பு மற்றும் சமூக உள்ளடக்கம் ஆகியற்றை அடிப்படையாகக் கொண்ட திட்டங்கள் அடிப்படை திட்டங்களிலேயே முக்கியமானவையாக கருதப்பட்டு, தேசிய வளர்ச்சித் திட்டத்தின் நிதியில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.
உ) விருப்பத் திட்டங்கள் : இத்திட்டங்களில் மாநில அரசுகள் விரும்பினால் பங்கெடுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். இத்திட்டங்களின் கீழ் தேவைப்படும் நிதி, மத்திய நிதி அமைச்சகத்தால் மொத்தமாக ஒதுக்கப்பட வேண்டும்.
தேசிய வளர்ச்சித் திட்டத்தின் கீழ் மத்திய அரசுத் திட்டங்கள்
அ |
|
அடிப்படைத் திட்டங்களில் முக்கியமானவை |
|
1
|
|
தேசிய சமூக உதவித் திட்டம் |
|
2
|
|
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம். |
|
3
|
|
தாழ்த்தப்பட்ட மக்களுக்கான திட்டம்.
|
|
4
|
|
பழங்குடியின மக்களுக்கான திட்டம் |
|
5
|
|
சிறுபான்மையினருக்கான திட்டம். |
|
6
|
|
பிற்படுத்தப்பட்ட, மாற்றுத் திறனாளிகள் மற்றும் இதர ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கான திட்டம்
|
|
ஆ |
|
அடிப்படைத் திட்டங்கள் |
|
7
|
|
பசுமை புரட்சி (கிருஷி உன்னாதி திட்டங்கள் மற்றும் ராஷ்ட்ரிய கிருஷி விகாஸ் யோஜனா)
|
|
8
|
|
வெண்மை புரட்சி (கால்நடை மற்றும் பால் உற்பத்தி)
|
|
9
|
|
நீலப் புரட்சி (மீன்வளர்ப்புத் திட்டங்கள்)
|
|
10
|
|
பிரதம மந்திரி க்ருஷி சின்ச்சாய் யோஜனா
|
|
|
1 |
அனைத்து வயல்களுக்கும் தண்ணீர்
|
|
|
2
|
ஒரு துளி பல பயிர்
|
|
|
3
|
ஒருங்கிணைந்த நீர் பாசன திட்டம் |
|
|
4
|
விரைவுபடுத்தப்பட்ட நீர்பாசனம் மற்றும் வெள்ள நீர் மேலாண்மை திட்டம் |
|
11
|
|
பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம்
|
|
12
|
|
பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா
|
|
|
1
|
பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா – ஊரகம் |
|
|
2 |
பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா – நகர்ப்புரம் |
|
13
|
|
தேசிய குடிநீர் திட்டம் |
|
14
|
|
தேசிய தூய்மை திட்டம் – |
|
|
a
|
தேசிய தூய்மை திட்டம் – ஊரகம் |
|
|
b
|
தேசிய தூய்மை திட்டம் – நகர்ப்புரம் |
|
15
|
|
தேசிய சுகாதார திட்டம்
|
|
|
a
|
தேசிய ஊரக சுகாதார திட்டம்
|
|
|
b
|
தேசிய நகர்புர சுகாதார திட்டம் |
|
|
c
|
மூன்றாம் நிலை நலத் திட்டம் |
|
|
d
|
மருத்துவக் கல்வியில் மனிதவளம்
|
|
|
e
|
ஆயுஷ் தேசிய திட்டம் |
|
16
|
|
ராஷ்ட்ரிய ஸ்வஸ்த்ய சுரக்ஷா யோஜனா
|
|
17
|
|
தேசிய கல்வித் திட்டம்)
|
|
|
a
|
அனைவருக்கும் கல்வித் திட்டம்
|
|
|
b
|
தேசிய நடுநிலை கல்வித் திட்டம் |
|
|
c
|
ஆசிரியர் பயிற்சி மற்றும் முதியோர் கல்வி
|
|
|
d
|
தேசிய உயர்நிலை கல்வித் திட்டம்
|
|
18
|
|
மதிய உணவுத் திட்டம்
|
|
19
|
|
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் |
|
|
a
|
அங்கன்வாடி திட்டம்
|
|
|
b
|
தேசிய ஊட்டச்சத்து திட்டம்
|
|
|
c
|
குழந்தைப் பேறு நலத்திட்டம்
|
|
|
d
|
இளம் மகளிருக்கான திட்டம்
|
|
|
e
|
ஓருங்கிணைந்த குழந்தை பாதுகாப்புத் திட்டம்
|
|
|
f
|
தேசிய குழந்தை காப்பகத் திட்டம். |
|
20
|
|
மகளிருக்கு அதிகாரம் வழங்கும் திட்டம் (பெண்களை பாதுகாத்து கல்வி வழங்கும் திட்டம், ஒரு நிறுத்தத் திட்டம், மகளிர் உதவி மையம், தங்கும் விடுதி, ஸ்வதார் க்ரே, மகளிர் நிதி ஒதுக்கீடு |
|
21
|
|
தேசிய வாழ்வியல் திட்டம்
|
|
|
a
|
தேசிய ஊரக வாழ்வியல் திட்டம்
|
|
|
b
|
தேசிய நகர்ப்புர வாழ்வியல் திட்டம்
|
|
22
|
|
வேலை வாய்ப்பு மற்றும் திறன் வளர்ச்சித் திட்டம்
|
|
|
a
|
வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம்
|
|
|
b
|
பிரதம மந்திரி கவுஷல் விகாஸ் யோஜனா |
|
23
|
|
சுற்றுச் சூழல், வனம் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு
|
|
|
a
|
பசுமை இந்தியாவுக்கான தேசிய திட்டம்
|
|
|
b
|
ஒருங்கிணைந்த வனவிலங்கு பாதுகாப்புத் திட்டம்
|
|
|
c
|
இயற்கை வளம் மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்புத் திட்டம்
|
|
|
d
|
தேசிய நதிகள் பாதுகாப்புத் திட்டம்
|
|
24
|
|
நகர்ப்புர புத்துணர்ச்சித் திட்டம் (அம்ருத் மற்றும் நவீன நகரங்கள் திட்டம் )
|
|
25
|
|
காவல்துறை நவீனப் படுத்தும் திட்டம் (பாதுகாப்புத் தொடர்பான செலவினங்கள் உட்பட)
|
|
26
|
|
நீதித்துறைக்கான உட்கட்டமைப்பு (கிராம நீதிமன்றங்கள் மற்றும் மின்னணு நீதிமன்றங்கள் உட்பட)
|
|
இ |
|
விருப்பத் திட்டங்கள் |
|
27
|
|
எல்லைப்புற வளர்ச்சித் திட்டம்
|
|
28
|
|
ஷ்யாம பிரசாத் முகர்ஜி ரூர்பன் திட்டம்
|
|
வரிசை எண் |
|
மத்திய அரசுத் திட்டங்களின் பெயர்கள் |
---|
இதற்கான நிதி வழங்குதல் கீழ்கண்டவாறு செயல்படுத்தப்படும்
அடிப்படை திட்டங்களின் முக்கியமான திட்டங்கள் :
தற்போது உள்ள நிதி வழங்கும் முறை தொடரும்.
அடிப்படை திட்டங்கள்
அ) 8 வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் 3 இமாலய மாநிலங்கள் மத்திய அரசு 90 விழுக்காடு மற்றும் மாநில அரசு 10 விழுக்காடு
ஆ) இதர மாநிலங்கள் மத்திய அரசு 60 விழுக்காடு, மாநில அரசு 40 விழுக்காடு
இ) சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசங்கள் : மத்திய அரசு 100 சதவிகிதம். சட்டமன்றம் உள்ள யூனியன் பிரதேசங்களுக்கு தற்போது உள்ள முறை தொடரும்.
விருப்பத் திட்டங்கள் :
அ) 8 வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் 3 இமாலய மாநிலங்கள் மத்திய அரசு 80 விழுக்காடு மற்றும் மாநில அரசு 20 விழுக்காடு
ஆ) இதர மாநிலங்கள் மத்திய அரசு 50 விழுக்காடு, மாநில அரசு 50 விழுக்காடு
இ) சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசங்கள் : மத்திய அரசு 100 சதவிகிதம். சட்டமன்றம் உள்ள யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு 80 விழுக்காடு மற்றும் மாநில அரசு 20 விழுக்காடு
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான தளர்வு முறை மற்றும் தளர்வு நிதி
அ) மத்திய திட்டங்கள் வகுக்கப்படுகையில் மத்திய அமைச்சகங்கள், சில மாநிலங்களுக்கு ராஷ்ட்ரிய கிருஷி விகாஸ் யோஜனா திட்டத்தில் உள்ளபடி, தளர்வு முறையை அமல்படுத்தலாம்.
ஆ) ஒவ்வொரு மத்திய திட்டத்திலும் உள்ள தளர்வு நிதி தற்போது உள்ள 10 சதவிகிதத்தில் இருந்து 25 சதவிகிதமாகவும், யூனியன் பிரதேசங்களுக்கு 30 சதவிகிதமாகவும் ஒட்டுமொத்த நிதி ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஏற்ற வகையில் செயல்படுத்தலாம்.