Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மாநில அந்தஸ்து பெற்ற தினத்தையொட்டி அருணாச்சல பிரதேசம், மிசோரம் மாநில மக்களுக்கு பிரதமர் வாழ்த்து


பிரதமர் திரு நரேந்திர மோடி அருணாச்சல பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களின் மாநில அந்தஸ்து பெற்ற தினத்தையொட்டி அந்த மாநில மக்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

“அருணாச்சல பிரதேசம் மாநில அந்தஸ்து பெற்ற தினத்தையொட்டி, அந்த மாநில மக்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். வரவிருக்கும் ஆண்டுகளில் உங்கள் மாநிலம் ஒட்டுமொத்த வளர்ச்சியை பெறவேண்டுமென்றும் நான் வேண்டிக் கொள்கிறேன்.

இச்சமயத்தில் மக்களின் எதிர்பார்ப்புகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றியுள்ள அருணாச்சல பிரதேசத்தின் புதிய அரசிற்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

மிசோரம் மாநிலத்தின் அருமையான மக்களுக்கும் மாநில அந்தஸ்து பெற்ற தினத்தையொட்டி எனது மிகச் சிறந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். வரவிருக்கும் ஆண்டுகளில் மிசோரம் மாநிலமானது வளர்ச்சியின் புதிய எல்லைகளை எட்டட்டும் என்றும் வாழ்த்துகிறேன்” என்று பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருந்தார்.