Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மாநிலங்களவை உறுப்பினர் திரு இளையராஜா பிரதமரைச் சந்தித்தார்


மாநிலங்களவை உறுப்பினர் திரு.இளையராஜா புதுதில்லியில் இன்று பிரதமர் திரு. நரேந்திர மோடியைச் சந்தித்தார்.

இளையராஜாவின் முதலாவது மேற்கத்திய பாரம்பரிய சிம்பொனியான வேலியன்ட் சமீபத்தில் லண்டனில் மதிப்புமிக்க ராயல் பில்ஹார்மோனிக் இசைக்குழுவுடன் நிகழ்த்தப்பட்டதை திரு மோடி பாராட்டினார். இந்திய மற்றும் உலக இசையில் இசைஞானியின் மகத்தான தாக்கத்தை அங்கீகரித்த பிரதமர் திரு. நரேந்திர மோடி, இளையராஜாவை “இசை மேதை என்றும் ஒரு முன்னோடி” என்றும் அவரது பணி உலக அளவிலான சிறப்பை தொடர்ந்து அளிக்கிறது என்றும் பாராட்டினார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி கூறியிருப்பதாவது;

“நமது இசை மற்றும் கலாச்சாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய இசை மேதையும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு இளையராஜாவைச் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.

அவர் அனைத்து வகையிலும் ஒரு முன்னோடியாகத் திகழ்கிறார். சில நாட்களுக்கு முன்பு லண்டனில் தமது முதலாவது மேற்கத்திய கிளாசிக்கல் சிம்பொனியான வேலியன்ட்டை அளித்ததன் மூலம் மீண்டும் வரலாறு படைத்தார். இந்த நிகழ்ச்சியுடன் உலகப் புகழ்பெற்ற ராயல் பில்ஹார்மோனிக் இசைக்குழு இருந்தது. இந்த முக்கியமான சாதனை அவரது இணையற்ற இசைப் பயணத்தில் மற்றொரு அத்தியாயத்தைக் குறிக்கிறது – இது உலக அளவிலான சிறப்பைத் தொடர்ந்து அளிக்கிறது”.

***

(Release ID: 2112324)
TS/IR/RR/KR