நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் நடைபெற்ற, குடியரசு துணைத்தலைவர் திரு. ஹமீது அன்சாரி பிரியாவிடை நிகழ்ச்சியில், மாநிலங்களவை உறுப்பினர்களுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடியும் பங்கேற்றார். திரு. அன்சாரியின் குடும்பம் சுமார் நூறு ஆண்டுகளாக பொது வாழ்க்கையில் இருந்த புகழ்மிக்க வரலாறு கொண்டது என்று பிரதமர் குறிப்பிட்டார். குடியரசு துணைத்தலைவர் சிறந்த ராஜதந்திரி என்று பாராட்டிய பிரதமர் பல்வேறு தருணங்களில் அயல்நாட்டு விவகாரங்களில் திரு. அன்சாரியின் தொலைநோக்கு அறிவுரைகளால் பயனடைந்ததாகவும் தெரிவித்தார்.
திரு. ஹமீது அன்சாரிக்கு பிரதமர் தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார்.