Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மல்யுத்த வீராங்கனை பூஜா கெலாட்டின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு பிரதமர் வாழ்த்து


பெண்களுக்கான 50 கிலோ ஃப்ரீ ஸ்டைல் மல்யுத்தத்தில் தங்கம் வெல்லத் தவறி வெண்கலப் பதக்கம் வென்ற பிறகு உணர்ச்சிவசப்பட்டு பேசிய மல்யுத்த வீராங்கனை பூஜா கெலாட்டின் பேட்டியை ட்விட்டர் பதிவாக .என். வெளியிட்டிருந்தது. அதற்கு பதிலளித்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, பூஜா கெலாட்டின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு வாழ்த்து தெரிவித்து, அவரை ஊக்கப்படுத்தினார்.

ட்விட்டர் பதிவில் பிரதமர் தெரிவித்திருப்பதாவது

பூஜா, உங்கள் பதக்கம் கொண்டாடப்பட வேண்டியது, மன்னிப்பு கோரத் தகுந்ததல்ல. உங்களது வாழ்க்கைப் பயணம் எங்களுக்கு ஊக்கமளிக்கிறது, உங்கள் வெற்றி எங்களை மகிழ்ச்சிப்படுத்துகிறது. உங்கள் எதிர்காலம் மிகச் சிறப்பாக உள்ளதுதொடர்ந்து சாதனை புரியுங்கள்.

•••••••••••••