மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ள விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் உள்ள 700 மெகாவாட் திறன் கொண்ட மிகப்பெரிய உள்நாட்டு அணுஉலை மின் நிலையமான, காக்ரபார் அணுமின் நிலையத்தின் 3-வது அலகு முழு திறனுடன் செயல்பாட்டை தொடங்கியுள்ளது.
இது தொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“இந்தியா மைல்கல்லை எட்டியுள்ளது.”
“முதலாவது மிகப்பெரிய உள்நாட்டு அணுஉலை மின் நிலையமான, குஜராத்தில் உள்ள காக்ரபார் அணுமின் நிலையத்தின் 3-வது அலகு முழு திறனுடன் செயல்பாட்டை தொடங்கியுள்ளது.
நமது விஞ்ஞானிகளுக்கும், பொறியாளர்களுக்கும் வாழ்த்துகள்.”
***
AD/PLM/AG/KPG
India achieves another milestone.
— Narendra Modi (@narendramodi) August 31, 2023
The first largest indigenous 700 MWe Kakrapar Nuclear Power Plant Unit-3 in Gujarat starts operations at full capacity.
Congratulations to our scientists and engineers.