Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மறைந்த தேவ் ஆனந்தின் 100-வது பிறந்த தினத்தை முன்னிட்டு இந்திய சினிமாவுக்கு அவர் அளித்த பங்களிப்புகளை பிரதமர் நினைவு கூர்ந்துள்ளார்


மறைந்த தேவ் ஆனந்தின் 100-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, இந்திய சினிமாவுக்கு அவர் அளித்த பங்களிப்புகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி நினைவு கூர்ந்துள்ளார்.

 

இது குறித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

 

“தேவ் ஆனந்த் ஜி எப்போதும் நினைவுகூரப்படும் சிறந்த ஆளுமையாகத் திகழ்கிறார். அவரது  கதை சொல்லும் திறமையும், சினிமா மீதான ஆர்வமும் ஈடு இணையற்றவை. அவரது திரைப்படங்கள் பொழுதுபோக்குக்கானது மட்டுமல்லாமல், இந்தியாவின் மாறிவரும் சமூகம் மற்றும் அதன் எதிர்பார்ப்புகளை பிரதிபலித்தன. அவரது காலத்தால் அழியாத நடிப்பு தொடர்ந்து பல தலைமுறைகளிடம் தாக்கத்தை  ஏற்படுத்தி வருகிறது. அவரது 100-வது பிறந்த நாளில் அவரை நினைவு கூர்கிறேன்.”

 

இவ்வாறு பிரதமர் தெரிவித்துள்ளார்.

 

***

 

AP/ANU/PLM/RS/GK