Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மறைந்த திருமதி.பல்ஜித் கவுர் துளசி ஜி எழுதிய ‘ஸ்ரீ குரு கோவிந்த் சிங் ஜியின் ராமாயணம்’ புத்தகத்தின் முதல் பிரதியை பிரதமர் பெற்றுக் கொண்டார்


பிரபல வழக்கறிஞர் திரு கேடிஎஸ் துளசி அவர்களின் தாயார் மறைந்த திருமதி பல்ஜித் கவுர் துளசி ஜி எழுதிய ஸ்ரீ குரு கோவிந்த் சிங் ஜியின் ராமாயணம்என்ற புத்தகத்தின் முதல் பிரதியை பிரதமர் திரு நரேந்திர மோடி பெற்றுக் கொண்டார். 

தொடர் சுட்டுரைகளில் பிரதமர் கூறுகையில், ‘‘ பிரபல வழக்கறிஞர் திரு கேடிஎஸ் துளசி அவர்களின் தாயார் மறைந்த திருமதி பல்ஜித் கவுர் துளசி ஜி எழுதிய ஸ்ரீ குரு கோவிந்த் சிங் ஜியின் ராமாயணம்என்ற புத்தகத்தின் முதல் பிரதியை  பெற்றேன்.  இந்த புத்தகத்தை இந்திராகாந்தி தேசிய கலைகள் மையம் (IGNCA) வெளியிட்டுள்ளது.

எங்களது பேச்சின் போது, வழக்கறிஞர் திரு கேடிஎஸ் துளசி, சீக்கிய மதத்தின் உன்னதமான கோட்பாடுகள் மற்றும் குர்பானி ஷாபாத்தையும் ஓதினார். அவரது செயலால் நான் ஈர்க்கப்பட்டேன்.  அந்த ஒலிப்பதிவு இங்கே. 

 https://t.co/0R9z836sLi “

*****************