Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மருத்துவர்கள் தினத்தன்று மருத்துவர்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்


மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு அனைத்து மருத்துவர்களுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவில் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், மருத்துவர்களுக்கு உரிய மரியாதை கிடைப்பதை உறுதி செய்யவும் அரசு முழுமையாக உறுதிபூண்டுள்ளது என்று திரு மோடி கூறியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டிருப்பதாவது:

“மருத்துவர்கள் தின #DoctorsDay நல்வாழ்த்துகள். நமது சுகாதார நாயகர்களின் வியப்பூட்டும்  அர்ப்பணிப்பு மற்றும் கருணையை கௌரவிக்கும் தினமாக இந்நாள் அமைந்துள்ளது. குறிப்பிடத்தக்க திறமையுடன் மிகவும் சவாலான சிக்கல்களை அவர்களால் சிறப்பாக எதிர்கொள்ள முடியும். இந்தியாவில் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துவதிலும், மருத்துவர்களுக்கு உரிய மரியாதை பரவலாகக் கிடைப்பதை உறுதி செய்வதிலும்  எங்கள் அரசு முழுமையாக உறுதிபூண்டுள்ளது.”

***

(Release ID: 2029839)

SMB/BR/RR