Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மருத்துவமனைகளுக்கான தேசிய தர அங்கீகார வாரியத்தால் நாக்பூர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டதற்காக மருத்துவக் குழுவினருக்குப் பிரதமர் பாராட்டு


மருத்துவமனைகளுக்கான தேசிய தர அங்கீகார வாரியத்தால் நாக்பூர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டதற்காக மருத்துவக் குழுவினருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். என்.ஏ.பி.ஹெச் (NABH) என்ற இந்த அங்கீகாரத்தை நாட்டிலேயே முதன் முறையாக பெரும் எய்ம்ஸ் மருத்துவமனை, இதுவாகும்.

நாக்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையின் ட்விட்டர் பதிவைப் பகிர்ந்து பிரதமர் குறிப்பிட்டதாவது:

“தரமான மருத்துவ சேவையை வழங்குவதில் முன்னுதாரணமாக இந்த சாதனையைப் படைத்த நாக்பூர் எய்ம்ஸ் மருத்துவக் குழுவினருக்கு வாழ்த்துகள்.”

***

 

SRI/BR/GK