Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மனநல ஆரோக்கியம், நலவாழ்வு குறித்த சிறப்பு தொகுப்பு பிப்ரவரி 12-ம் அன்று தேர்வுக்குத் தயாராவோம் நிகழ்ச்சியில் இடம் பெறுகிறது: பிரதமர்


‘தேர்வு வீரர்கள்’ விவாதிக்க விரும்பும் பொதுவான தலைப்புகளில் ஒன்று மனநலம் மற்றும் நலவாழ்வு என்பதாகும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். “எனவே, இந்த ஆண்டு தேர்வுக்குத் தயாராவோம் நிகழ்ச்சியில் இந்தத் தலைப்புக்கு என்று சிறப்பான தொகுப்பு  உள்ளது. இது நாளை பிப்ரவரி 12- ம் தேதி  அன்று ஒளிபரப்பாகும்” என்று திரு மோடி மேலும் கூறினார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது;

“தேர்வு வீரர்கள் விவாதிக்க விரும்பும் மிகவும் பொதுவான தலைப்புகளில் மனநலம், நலவாழ்வு உள்ளது. எனவே, இந்த ஆண்டு தேர்வுக்குத் தயாராவோம் நிகழ்ச்சியில் இந்த தலைப்புக்காக இடம் பெற்ற சிறப்பு தொகுப்பு நாளை, பிப்ரவரி 12-ம் தேதி அன்று ஒளிபரப்பாகும். மேலும் இந்தத் தலைப்பில் ஆர்வமுடைய   தீபிகாபடுகோனே அது குறித்து பேசுகிறார்.”

—-

(Release ID: 2101659)

TS/IR/KPG/KR