Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மனதின் குரல் நிகழ்ச்சிக்கு உள்ளீடுகளை அளிக்கும்படி பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்


பிரதமர் திரு. நரேந்திர மோடி, நவம்பர் 26 ஆம் தேதி ஒலிபரப்பாகவுள்ள  மனதின் குரல் நிகழ்ச்சிக்கு மக்கள் தகவல்கள் மற்றும் செய்திகளை வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த மாத மனதின் குரல் நிகழ்ச்சிக்கு ஏராளமான தகவல்கள் மற்றும் கருத்துகள் வருவது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

மைகவ் அல்லது நமோ செயலியில் இதுவரை பகிராத உள்ளீடுகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் பதிவில், பிரதமர் கூறியிருப்பதாவது;

“26-ம் தேதி ஒலிபரப்பாக உள்ள இந்த மாத மனதின் குரல் நிகழ்ச்சிக்கு #MannKiBaat ஏராளமான உள்ளீடுகள் வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

https://www.mygov.in/group-issue/inviting-ideas-mann-ki-baat-prime-minister-narendra-modi-26th-november-2023/

பகிரப்பட்ட உத்வேகமூட்டும் வாழ்க்கை பயணங்கள் இந்த நிகழ்ச்சியின் சாராம்சமாகும், இது ஒவ்வொரு அத்தியாயத்தையும் மிகவும் செழுமையாகவும் நுண்ணறிவு மிக்கதாகவும் மாற்றுகிறது.

இதுவரை தங்கள் உள்ளீடுகளைப் பகிராதவர்கள் மைகவ் அல்லது நமோ செயலியில் பகிரலாம்”.

*****

ANU/PKV/BS/RR/KV