செப்டம்பர் 25, 2022 அன்று காலை 11 மணிக்கு ஒலிபரப்பாகவுள்ள மனதின் குரல் நிகழ்ச்சிக்கான யோசனைகள் மற்றும் உள்ளீடுகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு பிரதமர் திரு நரேந்திர மோடி மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். யோசனைகளை மைகவ், நமோ செயலியில் பகிரலாம் அல்லது செய்தியை பதிவு செய்ய 1800-11-7800 என்ற எண்ணை டயல் செய்யலாம். 1922 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்கலாம். குறுந்தகவல் மூலம் பெறப்பட்ட இணைப்பைப் பின்தொடர்ந்து பிரதமருக்கு நேரடியாகவும் தெரிவிக்கலாம்.
மைகவ் அழைப்பைப் பகிர்ந்து கொண்டு, பிரதமர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது;
“#MannKiBaat இந்தியா முழுவதும் பல்வேறு உள்ளீடுகள் மற்றும் ஊக்கமளிக்கும் கூட்டு முயற்சிகளால் செழுமைப்படுத்தப்பட்டுள்ளது. இது நமது சமூகத்தில் நேர்மறையான மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. எப்போதும் போல, 25 ஆம் தேதி நடைபெறும் இந்த மாத அத்தியாயத்திற்கான உங்கள் உள்ளீடுகளைப் பெற ஆவலுடன் காத்திருக்கிறேன்.”
—————–
(Release ID: 1858796)
#MannKiBaat is enriched by diverse inputs and inspiring collective efforts across India which have brought positive changes in our society. Like always, I look forward to receiving your inputs for this month's episode which will take place on the 25th. https://t.co/GZyrY61gpk
— Narendra Modi (@narendramodi) September 12, 2022