வரும் ஆகஸ்ட் 28, 2022 அன்று காலை 11 மணிக்கு ஒலிபரப்பப்படவுள்ள மனதின் குரல் நிகழ்ச்சிக்கு யோசனைகளையும், கருத்துகளையும் பகிருமாறு பிரதமர் திரு நரேந்திர மோடி பொது மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். மைகவ் (MyGov), நமோ செயலியில் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களைப் பகிரலாம், அல்லது 1800-11-7800 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு செய்திகளை பதிவிடலாம்.
மைகவ் தளத்தின் மின் இணைப்பைப் பகிர்ந்து, பிரதமர் ட்விட்டர் செய்தியில் பதிவிட்டிருப்பதாவது:
“ஆகஸ்ட் 28-ஆம் தேதி ஒலிபரப்பப்படவுள்ள வரவிருக்கும் மனதின் குரல் #MannKiBaat நிகழ்ச்சிக்கான யோசனைகளையும், கருத்துகளையும் ஆவலோடு எதிர்நோக்குகிறேன். மைகவ் (MyGov) அல்லது நமோ செயலியில் பகிருங்கள். இது தவிர 1800-11-7800 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு உங்கள் செய்திகளை பதிவிடுங்கள்.
***************
Looking forward to ideas and inputs for the upcoming #MannKiBaat programme on 28th August. Write on MyGov or the NaMo App. Alternatively, record a message by dialling 1800-11-7800. https://t.co/7Dbx87p1up
— Narendra Modi (@narendramodi) August 17, 2022