Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மனதின் குரல் நிகழ்ச்சிக்கான கருத்துக்களை உங்கள் குரலில் பதிவு செய்யுங்கள் –பிரதமர் கோரிக்கை


மனதின் குரல் நிகழ்ச்சிக்கான தங்களது கருத்துக்களை மக்கள் தங்கள் குரலிலும் பதிவு செய்யலாம் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் திரு. நரேந்திர மோடி அகிய இந்திய வானொலியில் பங்கேற்கும் மனதின் குரல் (மன்-கீ-பாத்) நிகழ்ச்சிக்கு மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தற்போது எனது அரசு (MyGov.in) என்ற இணையதளத்தின் மூலம் மக்கள் தங்களது கருத்துக்களை தங்களது குரலிலேயே தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தி மற்றும் ஆங்கிலத்தில் கருத்துக்களை பதிவு செய்ய 1800 3000 7800 என்ற இலவச தொலைபேசி எண்ணை அழைக்க வேண்டும்.

“ ‘எனது அரசு’ என்ற இணையதளம் எடுத்துள்ள சுவாரஸ்யமான முயற்சியினால் இந்த வார மனதின் குரல் நிகழ்ச்சியில் (மன்-கீ-பாத்) நீங்களும் பங்குபெறலாம். நான் சிலரின் கருத்துக்களை அவர்களது குரலிலேயே கேட்டேன், அவை மிகவும் தனித்தன்மை வாய்ந்ததாக இருந்தது. இது போன்று அனைவரும் தங்களது கருத்துக்களை தொடர்ந்து பதிவு செய்து கொண்டே இருங்கள். இவற்றில் சில கருத்துக்கள் இந்த வார நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகும்”, என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

•••••••