Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் ‘ஏ” குரூப் அதிகாரிகளின் பணிநிலைப் பிரிவு திறனாய்வுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.


பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (CRPF) ‘ஏ’ குரூப் அதிகாரிகளின் பணிநிலைப் பிரிவு பரிசீலனைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. துணை கமாண்டண்ட் முதல் சிறப்பு டி.ஜி அந்தஸ்த்து வரை பல தரவரிசைகளில் புதிதாக 90 பணியிடங்களை உருவாக்கி இதை செயல்படுத்த இருக்கிறார்கள். CRPF-யில் இந்த புதிய பணியிடங்களை உருவாக்குவதன் மூலம் செயல்பாட்டுத் திறனும், நிர்வாகத்திறனும் பன்மடங்கு மேம்படும்.

பணிநிலை பரிசீலனையின் கீழ் தற்போது இருக்கும் க்ரூப் ‘A’ பணியிடங்கள் கீழுள்ள முறையில் 4210ல் இருந்து 4300 ஆக உயர்த்தப்பட இருக்கிறது:

1. 1 சிறப்பு டிஜி பணியிடம் அதிகப்படுத்தப்பட்டுள்ளது (எச்.ஏ.ஜி+ நிலை)

2. 11 இன்ஸ்பெக்டர் ஜெனரல் பணியிடங்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. (எஸ்.ஏ.ஜி நிலை)

3. 277 டி.ஐ.ஜி/கமாண்டண்ட்/2-ஐ/சி பணியிடங்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. (ஜே.ஏ.ஜி நிலை)

4. 199 துணை கமாண்டண்ட் (எஸ்.டி.எஸ் நிலை) பணியிடங்கள் குறைக்கப்பட்டுள்ளன.

பின்னணி:

மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) ஆயுதம் ஏந்திய மத்திய போலீஸ் படைகளில் ஒன்று. 1939ல் இப்படை உருவாக்கப்பட்டது. 1983ஆம் ஆண்டில் முதல் பணிநிலை பரிசீலனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் இரண்டாவதும், கடைசியுமான பணிநிலை பரிசீலனை 1991ல் மேற்கொள்ளப்பட்டது. 1991க்கு பின் முறைப்படியான பரிசீலனை எதுவும் நடக்கவில்லை என்றாலும் பெரிய விரிவாக்கமும், சீரமைப்பும் 2004 மற்றும் 2009ல் நடந்துள்ளது. ஆனால் இந்த விரிவாக்கத்தின் போது படைகள் அதிகப்படுத்தப்பட்டனவே தவிர போதிய அளவில் கண்காணிப்பு பதவிகளும், உதவிப்பதவிகளும் உருவாக்கபடவில்லை.