பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்துக்கும் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் நிறுவனத்துக்கும் இடையே தகவல் மற்றும் தொலைத் தொடர்புத் தொழில்நுட்பம் உதவியிலான ஒருங்கிணைந்த குழந்தைகள் சேவைகள் திட்ட உண்மை நிலவர கண்காணிப்பு மற்றும் இதர தொழில்நுட்ப விஷயங்களுக்கான ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்திடுவதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது.
இந்த ஒத்துழைப்பு ஒப்பந்தம் கீழ்க்கண்டவைகளுக்கு உதவும்.
a. ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுச் சேவையில் தகவல் மற்றும் தொலைத் தொடர்பு தொழில்நுட்ப உண்மைநிலைக் கண்காணிப்பு முறை அமலாக்கத்தினால் உரிய சேவை உரிய நேரத்தில் வழங்கப்படுவதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு வசதிகள் ஏற்படுகின்றன.
b. பெரிய அளவிலான தகவல் பரப்புவதற்கு உரிய திட்டங்களுடன் தேசிய தொலைத் தொடர்பு இயக்கம், தொலைத் தொடர்பு அணுகுமுறை மற்றும் வழி காட்டு நெறிமுறைகள், தொலைத் தொடர்பை தேவைக்கு உக அமைத்துக் கொள்ளுதல், உள்ளூர் நிலைமைக்கேற்ற உற்பத்திப் பொருட்கள் மற்றும் இதரப் பொருட்கள் ஏற்பாடு செய்தல்
c. ஊட்டச்சத்து நிபுணர்களைக் கொண்ட உயர்தர தொழில்நுட்ப குழுக்கள் மூலமான தொழில்நுட்ப ஆதரவு வழங்குதல்
ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுச் சேவைகள் அமைப்பினை வலுப்படுத்துதல் மற்றும் ஊட்டச்சத்து மேம்பாட்டு திட்டத்தின் முதல் கட்டம் தனது கண்காணிப்புப் பணிகளை பங்கேற்கும் எட்டு மாநிலங்களில் உள்ள 162 உயர் தேவை மாவட்டங்களில் ஒரு லட்சம் அங்கன்வாடி மையங்கள் மூலம் அமல்படுத்தும். ஆறு வயது வரை உள்ள குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோர் திட்டத்தின் பயனாளிகள் ஆவர்.
ஆந்திரப் பிரதேசம், பீஹார், சத்திஸ்கர், ஜார்க்கண்ட, மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் ஆகிய எட்டு மாநிலங்களின் ஊட்டச்சத்து குறைவு அதிகம் காணப்படும் 162 மாவட்டங்கள் இந்த ஒத்துழைப்பு ஒப்பந்தத்தால் பயன் பெறும்.
பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை கீழ்க்கண்டவற்றை வழங்கும்.
i ஊட்டச்சத்தை குறிப்பாக, கர்ப்பத்திற்கு முந்தைய காலம், கர்ப்பக காலம், குழந்தையின் முதல் இரண்டு ஆண்டு பருவத்தில், வழங்கும் திறனை தேசிய மாநில நிலைகளில் வலுப்படுத்துவதற்கான தொழில்நுட்ப ஆதரவு .
ii பொதுச் செயலி மென்பொருளை வடிவமைப்பதில் தொழில்நுட்ப உதவி ஆதரவு வழங்குவதற்கு நிறுவனமும் மகளிர் குழந்தை நல மேம்பாட்டு அமைச்சகமும் ஏற்றுக் கொண்ட தகுதிகள் உள்ள நிறுவனங்களுக்கு நிதி உதவி அளித்தல். இந்தச் செயலி மென்பொருள் ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவை அமைப்பு முறையை வலுப்படுத்துதல் மற்றும் ஊட்டச் சத்து மேம்பாட்டு திட்ட உண்மை நிலைக் அடிப்படையிலான கண்காணிப்பு தொடர்பான தகவல் மற்றும் தொலைத் தொடர்பு தொழில்நுட்பத்தை இயக்குவதாகவும் அமைய வேண்டும்.
iii திட்ட இலக்கு மக்களிடையே தாய்மை மற்றும் குழந்தை ஊட்டச்சத்து குறித்த தேசிய தகவல் தொடர்பு இயக்கத்தை அமைத்து நடத்த மகளிர் மற்றும் குழந்தை மேம்பாட்டு அமைச்சகத்துக்கு ஆதரவு வழங்குதல்.
இந்த ஒத்துழைப்பு ஒப்பந்தம் கண்காணிப்பை இயக்கும் செயலி மென்பொருளை உருவாக்குதல், பயிற்சியாளர்களுக்கு பயிற்சி வழங்குதல் மற்றும் இதரத் தொழில்நுட்ப விஷயங்களுக்கு உதவும் கண்காணிப்பு நடைமுறையும் இதர திட்டக் கூறுகளும் கட்டம் கட்டமாக அமல்படுத்தப்படும். இதில் மென்பொருள் ஆதரவு ஐந்து ஆண்டு காலத்திற்கு வழங்க வகை செய்யப்பட்டுள்ளது. திட்ட மாநிலங்களில் முன்னுரிமை மாவட்டங்களில் செயலி மென்பொருள் இயக்கும் அமைப்புகளை நிறுவுவதில் ஆதரவு வழங்கப்படும். மகளிர் குழந்தை மேம்பாட்டு பயிற்சியாளர்களுக்கு பயிற்சியும் வழங்கப்படும். அமைச்சகத்தின் பயிற்சியாளர்கள் அங்கண்வாடிப் பணியாளர்களுக்கும் உள்ளூர் மேற்பார்வையாளருக்கும் இந்த தகவல் தொலைத் தொடர்பு தொழில்நுட்ப முறையைப் பின்பற்றுவதில் பயிற்சி அளிப்பார்கள்.
இந்த ஒப்பந்தத்தில் அமைச்சகத்துக்கு நிதிச் சுமை ஏதும் குறிப்பிடப்படவில்லை. பொதுச் செயலி மென்பொருள் நிறுவனத்தின் மூலம் அதன் கூட்டாளிகள் உதவியுடன் உருவாக்கப்பட்டு அமைச்சகத்துக்கு இலவசமாக ஆதாரக் குறியீடுகளுடன் வழங்கப்படும். இதனை அடுத்து அமைச்சகம் தேசியத் தகவல் மையத்தின் மூலம் இதனை வெளியிடும். அதே போல மூன்றாம் நிலை ஆதரவு, தொலைத் தொடர்பு மற்றும் தகவல் சாதனப் பொருட்கள் தலைமைப் பயிற்சியாளர் பயிற்சி, தேசிய நிலைத் தொலைத் தொடர்பு அணுகுமுறை, நெறிமுறை உருவாக்கம் ஆகியவை சம்மந்தமாகவும் அமைச்சகத்துக்கு நிதிச்சுமை ஏதும் இல்லை. இவற்றை நிறுவனமே உருவாக்கும்.
பின்னணி:
நாட்டின் எட்டு மாநிலங்களில் அதிகத் தேவை உள்ள 162 மாவட்டங்களில் சர்வதேச மேம்பாட்டு அமைப்பின் உதவியுடன் மகளிர் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஒருங்கிணைந்த குழந்தைகள் சேவை ஊட்டச்சத்து திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் முதலாம் கட்டம் 31.12.2015 அன்று முடிவடைவதாக இருந்தது. அது மாற்றியமைக்கப்பட்டு இரண்டாண்டு கால அதாவது 30.12.2017 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாற்றியமைக்கப்பட்ட நிதி உடன்பாடு பொருளாதார விஷயங்கள் துறைக்கும் சர்வதேச மேம்பாட்டு முகமைக்கும் இடையே 2015 செப்டம்பரில் கையெழுத்தானது. ஒருங்கிணைந்த குழந்தைகள் சேவைகள் ஊட்டச்சத்து திட்ட சீரமைப்புக்கு செலவினத்துறையிடமிருந்து அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்தச் சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதற்கான சீரமைக்கப்பட்ட திட்டம் ஐ. சி. டி. அடிப்படையிலான உண்மை நிலைக் கண்காணிப்பை முக்கியச் செயல்பாடாக கொண்டுள்ளது.