Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மத்திய தொழில் பாதுகாப்புப் படை உதய தினத்தை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து


இன்று மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் (சிஐஎஸ்எஃப்) உதய தினத்தை முன்னிட்டு அதன் அனைத்து பணியாளர்களுக்கும் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மத்திய தொழில் பாதுகாப்புப் படை அதன் தொழில்முறை, அர்ப்பணிப்பு, தைரியம் ஆகியவற்றுக்காக போற்றப்படுவதாக திரு மோடி தெரிவித்துள்ளார். “அத்தியாவசிய உள்கட்டமைப்பைப் பாதுகாப்பதன் மூலமும், ஒவ்வொரு நாளும் எண்ணற்ற மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதன் மூலமும் சிஐஎஸ்எஃப் நமது பாதுகாப்பு அமைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. கடமையில் சிஐஎஸ்எஃப் வீரர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு உண்மையிலேயே பாராட்டத்தக்கது” என்று பிரதமர் மேலும் கூறியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளப் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:

“மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் அனைத்து பணியாளர்களுக்கும் உதய தின வாழ்த்துகள்! இந்தப் படை அதன் தொழில்முறை, அர்ப்பணிப்பு மற்றும் தைரியத்திற்காகப் போற்றப்படுகிறது. அத்தியாவசியமான உள்கட்டமைப்பைப் பாதுகாப்பதன் மூலமும், ஒவ்வொரு நாளும் எண்ணற்ற மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதன் மூலமும் அது நமது பாதுகாப்பு அமைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. கடமைக்கான அவர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு உண்மையிலேயே பாராட்டத்தக்கது.”

***

TS/PKV/AG/DL