Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மத்திய தொழில் பாதுகாப்புப்படை நிறுவனத் தினத்தையொட்டி பிரதமர் வாழ்த்து


மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் நிறுவன தினத்தையொட்டி  அதன் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;

“மத்திய தொழில் பாதுகாப்புப்படை அமைக்கப்பட்ட இந்நாளில்  அனைத்து வீரர்களுக்கும், வாழ்த்துக்கள். நமது பாதுகாப்பு அமைப்புகளில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை முக்கிய பங்கு வகிக்கிறது. பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த உள்கட்டமைப்புகள்  உள்ளிட்ட முக்கிய இடங்களில் 24 மணிநேர பாதுகாப்பை அவர்கள் வழங்குகிறார்கள். மத்திய தொழில் பாதுகாப்புப் படை அதன் கடின உழைப்பு மற்றும் சிறப்பான தொழில்முறைக்கு பெயர் பெற்றது.”

***

AD/PKV/AG/RR

(Release ID: 1905465)