Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் குரூப் `ஏ’ நிர்வாக நிலை பொறுப்பை மறு ஆய்வு செய்ய அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் (CISF) குரூப் `ஏ’ நிர்வாக நிலை பொறுப்பை மறு ஆய்வு செய்ய  ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்மூலம் சி.ஐ.எஸ்.எப்-ல் மூத்த பணி நிலைகளில் மேற்பார்வை அலுவலர் பணியிடங்களை அதிகரிக்கும் வகையில்  உதவி கமாண்டண்ட் முதல் கூடுதல் தலைமை இயக்குநர் வரையிலான பல்வேறு அந்தஸ்துகளில் 25 பணியிடங்கள் உருவாக்கப்படும்.

 

சி.ஐ.எஸ்.எப். பணி நிலையை மாற்றி அமைப்பதால் குரூப் `ஏ’  நிலை பணியிடங்களின் எண்ணிக்கை 1252-ல் இருந்து 1277 ஆக உயரும். 2 கூடுதல் தலைமை இயக்குநர் பணியிடங்கள், 7 இன்ஸ்பெக்டர் ஜெனரல் பணியிடங்கள், 8 துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் பணியிடங்கள், 8 கமாண்டண்ட் பணியிடங்கள் உருவாக்கப்படும்.

 

தாக்கம்:

சி.ஐ.எஸ்.எப் -ல் இந்த குரூப் `ஏ’ பணியிடங்கள் உருவாக்கப்படுவதால், இந்தப் பிரிவில் மேற்பார்வை செயல்திறன் மற்றும் திறன் வளர்ப்பு நிலைகள் மேம்படும். இந்தப் பிரிவில் முன்மொழியப்படும் குரூப் `ஏ’ பணியிடங்கள் குறித்த காலத்தில் உருவாக்கப்படுவதால் மேற்பார்வை மற்றும் நிர்வாகத் திறன்களும் மேம்படுத்தப்படும்.

 

பின்னணி:

சி.ஐ.எஸ்.எப்  சட்டம் 1968 சட்டத்தின்படி, இந்திய அரசின் ஆயுதப்படையாக அறிவிக்கை செய்து 1983ல் திருத்தியபடி சி.ஐ.எஸ்.எப் உருவாக்கப்பட்டது. பொதுத் துறை நிறுவனங்களின் சொத்துகளைப் பாதுகாப்பது தான் சி.ஐ.எஸ்.எப் -ன் முதன்மையான பணிப் பட்டியலாக இருந்தது.தனியார் துறை நிறுவனங்களுக்குப் பாதுகாப்பு அளிப்பது மற்றும் மத்திய அரசால் ஒப்படைக்கப்படும் மற்ற கடமைகளையும் நிறைவேற்றுவது என்ற வகையில் பணிப் பட்டியல்களை விரிவாக்கம் செய்து, இந்தச் சட்டம் 1989, 1999 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் திருத்தம் செய்யப்பட்டது.

வெறும் மூன்று பட்டாலியன்களை மட்டும் கொண்டதாக CISF 1969ல் உருவாக்கப்பட்டது. 12 ரிசர்வ் பட்டாலின்கள் மற்றும் HQR-கள் தவிர, CAPF போன்ற பட்டாலியன் பலம் சி.ஐ.எஸ்.எப் -க்கு கிடையாது. இப்போது நாடு முழுக்க 336 தொழில் நிறுவனங்களுக்கு (59 விமான நிலையங்கள் உள்பட) இந்தப் பிரிவு பாதுகாப்பு அளிக்கிறது. 1969ல் அனுமதிக்கப்பட்ட 3192 பேருடன் தொடங்கப்பட்ட இந்தப் பிரிவு, 30.06.2017 தேதியின்படி 1,49,088 பலம் கொண்டதாக வளர்ந்திருக்கிறது சி.ஐ.எஸ்.எப் -ன் தலைமையகம் தில்லியில் உள்ளது. பதவி வழி பொறுப்பாக உள்ள  தலைமை இயக்குநர் தலைமையில் இது செயல்படுகிறது.

 

******