பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்திய ரயில்வே மருத்துவ சேவையில் உள்ள மருத்துவர்களின் ஓய்வுபெறும் வயதை 65 ஆக உயர்த்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வித் துறையின் கீழ் உள்ள IIT-கள் (தன்னாட்சி நிறுவனங்கள்) மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் உள்ள பெரிய துறைமுக பொறுப்புக் கழகங்களின் (தன்னாட்சி நிறுவனங்கள்) டாக்டர்களுக்கும் ஓய்வு பெறும் வயதை 65 ஆக உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
அந்தந்த அமைச்சகங்கள் / துறைகளின் [M/o of AYUSH (AYUSH மருத்துவர்கள்), பாதுகாப்புத் துறை (ராணுவ மருத்துவ சேவை டைரக்டரேட் ஜெனரலின் கீழ் உள்ள சிவிலியன் மருத்துவர்கள்), பாதுகாப்பு உற்பத்தித் துறை ()இந்திய ராணுவத் தளவாட சுகாதார சேவை மருத்துவ அதிகாரிகள், சுகாதாரம் & குடும்ப நலத் துறையின் கீழ் உள்ள பல் மருத்துவர்கள், ரயில்வே அமைச்சகத்தின் கீழ் உள்ள பல் மருத்துவர்கள் மற்றும் உயர் கல்வித் துறையின் கீழ் உயர் கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிலையங்களில் பணிபுரியும் மருத்துவர்கள்], நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் பணியாற்றும் டாக்டர்களுக்கு ஓய்வுபெறும் வயது 65 ஆக உயர்த்தப் பட்டுள்ளது.
நிர்வாகப் பதவிகளை வகிப்பதற்கு, செயல்பாட்டுத் தேவைக்கு ஏற்ப , டாக்டர்களுக்கான வயது குறித்து அந்தந்த அமைச்சகங்கள் / துறைகள் / நிறுவனங்கள் பொருத்தமான முடிவு எடுப்பதற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
நோயாளிகளை நன்கு கவனித்தல், மருத்துவக் கல்லூரிகளில் நல்ல கல்வி செயல்பாடுகள் கிடைக்க இந்த முடிவு உதவியாக இருப்பதுடன், சுகாதார சேவைகளை அளிப்பதற்கான தேசிய சுகாதாரத் திட்டங்களை செம்மையாக செயல்படுத்தவும் உதவியாக இருக்கும்.
மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் / துறைகளில் உள்ள சுமார் 1445 மருத்துவர்கள் இதனால் பயன்பெறுவார்கள்.
பெருமளவிலான பணியிடங்கள் காலியாக இருப்பதால், இந்த முடிவால் பெரிய அளவில் நிதி பாதிப்பு இருக்காது. அனுமதிக்கப்பட்ட பணியிடங்களுக்குப் பதிலாக, இப்போது பணியில் உள்ளவர்கள் அதே நிலையில் தங்கள் பணியைத் தொடர்வார்கள்.
பின்னணி :
• மத்திய சுகாதார சேவையில் உள்ள டாக்டர்களின் ஓய்வுபெறும் வயது 2016 மே 31 ஆம் தேதியில் இருந்து 65 ஆக உயர்த்தப்பட்டது.
• மத்திய சுகாதார சேவை அல்லாத, மத்திய அரசின் மற்ற மருத்துவ சேவைத் துறைகளில் உள்ளவர்களும், CHS-க்கு இணையாகவும், பற்றாக்குறையை கருத்தில் கொண்டும் இதே வசதியை அளிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.